ஊட்டி: தேயிலை தொழிலாளர்களின் சம்பளம் குறைகிறது
ஊட்டி:
தேயிலை விலை வீழ்ச்சியின் எதிரொலியாக தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை 25 சதவீதம் குறைக்க தேயிலைத் தோட்ட அதிபர்கள் சங்கம்முடிவு செய்துள்ளது.
நீலகிரியில் கடந்த ஓராண்டாக தேயிலை விலை கடும் வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்த வீ ழ்ச்சியால் தேயிலைத் தொழில் கடும் பாதிப்பிற்குள்ளாகிவருகிறது.
இந்த வீழ்ச்சியுடன் கடந்த சில வாரங்களாகவே குன்னூரில் உள்ள தேயிலை ஏல மையத்தில் ஏல விற்பனையிலும் இந்த வீழ்ச்சி தொடர்ந்து வருகிறது.
குன்னூர் தேயிலை ஏல மையத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு தேயிலை கிலோ ஒன்றிற்கு சராசரியாக ரூ. 33. 18 ஆக இருந்து வருகிறது.தென்னிந்திய அளவில் இந்த சராசரி விலை ரூ. 44 ஆக இருந்து வருகிறது.
இதனால் தோட்ட அதிபர்கள் உட்பட தேயிலைப் பதப்படுத்தும் தொழிற்சாலைகளும் கடும் நஷ்டத்திற்குள்ளாகி வருகின்றன. இதையடுத்து தேயிலைத்தோட்டத் தொழிலாளர்கள் பெற்று வரும் சம்பள விகிதங்களில் 25 சதவீதத்தை குறைக்க தேயிலைத் தோட்டத் தொழிலதிபர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.குன்னூரில் நடந்த தேயிலை தோட்ட தொழிலதிபர்கள் சங்கக் கூட்டத்தில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.
தொழிற்சாலை நிர்வாகத்தினர் செலுத்தி வரும் கலால் வரி, விற்பனை வரி ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும். இறக்குமதி தேயிலையை அடியோடு ரத்துசெய்ய வேண்டும். தேயிலை ஏல மையங்களில் குறைந்த பட்சத் தேயிலை விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு தோட்டத் தொழிலதிபர்கள் சங்கத் தலைவர் மகேஸ்வரி, துணைத் தலைவர் ஹெக்டோ, நீலகிரி மாவட்ட தேயிலைத் தோட்டத்தொழிலதிபர்கள் சங்கத் தலைவர் வினோத் ஷெனாய் மற்றும் சி.ஐ.டி.யு, ஐ .என். டி. யு.சி உட்பட பல்வேறு தொழிற்சங்கப் பிரகர்கள் கலந்து கொண்டனர்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications