கோவில் பணியாளர்கள் வேலைநிறுத்தம்
திருச்சி:
தமிழ்நாடு கோவில் பணியாளர்கள் சம்மேளன உறுப்பினர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை வேலை நிறுத்தத்தைத் தொடங்கினர்.
திருச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள கோவில்களில் வேலை செய்யும் ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில்கலந்து கொண்டனர்.
இது குறித்து கோவில் பணியாளர்கள் சங்க துணைத் தலைவர் வைத்தியலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்து அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோவில்களில் பணிபுரியும் கோவில் ஊழியர்களுக்கு ஓய்வூதியம், விடுமுறை, விருப்பு ஓய்வு மற்றும் பிறசலுகைகளை அரசு அளிக்க வேண்டும். இது குறித்துப் பலமுறை அரசுக்கு எடுத்துக் கூறியும் கோரிக்கைகள் குறித்து, அரசு கண்டு கொள்ளவேயில்லை.
விழா காலங்களில் நடத்தப்படும் பூஜைகள், சடங்குகள் போன்றவற்றுக்கும் அதிக ஊதியம் வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்திவெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அரசு கோவில் ஊழியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றா விட்டால் வரும் 13 ம் தேதி முதல் காலவரையறையற்ற வேலைநிறுத்தத்தில்ஈடுபடப்போவதாக கோவில் ஊழியர்கள் சங்கப் பொருளாளர் பிரசன்னா வெங்கடேசன் கூறியுள்ளார்.
யு.என்.ஐ.
-
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications