கோவை மலைப்பகுதியில் வீரப்பன்?
கோவை:
கோவை அருகே உள்ள மலைப் பகுதியில் வீரப்பன் நுழையலாம் என்ற எதிர்பார்ப்பையடுத்து போலீஸ் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.
கோவை நீலகிரி மாவட்ட எல்லைப் பகுதியான ஆனைகட்டி மலைப் பகுதியில் வீரப்பன் கும்பல் நடமாட்டம் இருப்பதாக நம்பகத் தகவல்கள்வெளியாகியுள்ளன. எனவே இந்தப் பகுதியில் உள்ள அதிரடிப்படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கனவே பண்ணாரிக் காட்டுப் பகுதியில் அதிரடிப்படையினர் தற்போது தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து வீரப்பன், தனதுஆதரவாளர்களுடன் பண்ணாரிக் காட்டிலிருந்து நீலகிரி மலைப் பகுதிக்குள் நுழையலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. நீலகிரி மாவட்ட எஸ். பி ராமர்த்திதலைமையில் போலீசார் பல்வேறு கிராமங்களுக்குச் சென்று ஆதிவாசிகளிடம் விசாரணை நடத்தினார்.
ஆதிவாசி மக்களிடம் சந்தேகத்தற்குரிய நபர்களின் நடமாட்டம் இருந்தால் உடனடியாகத் தகவல் தெரிவிக்கும் படி கூறியுள்ளார். மேலும், பந்திப்பூர்,மாயார், தெப்பக்காடு, கக்கநள்ளா போன்ற கிராமங்களிலும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
வனத்துறையினர் மற்றும் ஆதிவாசிகளின் ஒத்துழைப்பையும் அதிரடிப்படையினர் மற்றும் போலீசார் நாடியுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications