சீனா: பஸ் மீது லாரி மோதியதில் 26 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
பீஜிங்:
சீனாவில் மங்கோலியா பகுதியில் நின்று கொண்டிருந்த பஸ் மீது எதிர்திசையிலிருந்து வந்த லாரி மோதியதில் 26 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இக்கோரவிபத்தில் 24 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பஸ்சில் மொத்தம் 42 க்கும் மேற்பட்ட பயணிகள் பிரயாணம் செய்து கொண்டிருந்தனர்.பயணிகள் இந்த பஸ் சிறிது நேரம் நின்று கொண்டிருந்த போது எதிர் திசையிலிருந்து வந்த லாரி மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டது.
இவ்விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications