கள்ளச்சாராயம்: பெண்கள் படுகொலைக்கு ஜெ. கண்டனம்
சென்னை:
செங்கல்பட்டு எம்.ஜி.ஆர். மாவடத்தில் மகளிர் அமைப்பைச் சேர்ந்த இரு பெண்கள் கள்ளச் சாராயத்தை எதிர்த்து போராடியதால் கொல்லப்பட்டசம்பவத்திற்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
செங்கல்பட்டு எம்.ஜி.ஆர். மாவட்டத்திலுள்ள திருவள்ளூரில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதை அங்குள்ள மகளிர் அணியினர் எதிர்த்து போராடி வந்தனர்.இவர்களில் ரத்தனம்மாள் மற்றும் இந்திராணி என்பவர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வன்மையாக கண்டித்திருக்கிறார். போலீசார் குற்றவாளிகள் யாராக இருந்தாலும்பாரபட்சம் பார்க்காமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கருணாநிதி அரசு கள்ளச் சாராயத்தை தடுக்க தவறி விட்டது. இரு தினங்களுக்கு முன் கள்ளச் சாராயத்தை எதிர்த்து போராடிய மகளிர் சங்கத்தை சேர்ந்த இரண்டுபெண்களை கள்ளச் சாராய வியாபாரிகள் கொன்றுள்ளனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளிகள் மீது போலீசார் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. போலீசார் ஆளும் தி.மு.க. வினரின்மிரட்டலுக்கு பயந்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மதுரையில் தி.மு.க.வைச் சேர்ந்த சமூக விரோதிகள் இரண்டு பேர் கள்ளச் சாராயத்தை எதிர்த்து போராடிய சி.பி.எம். கவுன்சிலர் லீலாவதியை கொன்றுவிட்டனர்.
கடலூர் பகுதியில் கள்ளச் சாராயத்தை எதிர்த்து போராடிய சி.பி.எம்.ஐச் சேர்ந்த இளைஞர்களும் கொல்லப்பட்டனர்.
இது போன்ற வன்முறைச் சம்பவங்களுக்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications