அயோத்தி பிரச்சனை: திமுகவின் அமைதி மெதுவாகக் கலைந்தது
சென்னை:
அயோத்தி பிரச்சனையில் பிரதமர் வாஜ்பாய் தெரிவித்துள்ள பிரச்சனைக்குறிய கருத்து குறித்து ஏதும் பேசாமல் அமைதி காத்துவந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி இப்போது தான் தனது மெளனத்தைக் கலைத்துள்ளார்.
ஆனால், வாஜ்பாய்க்கு எதிர்ப்போ, பா.ஜ.கவை நோக்கி கேள்விகளோ எல்லாம் கேட்கவில்லை கருணாநிதி. இந்தப் பிரச்சனையில்தி.மு.க. அமைதி காத்து வருவதைக் கண்டித்து வரும் எதிர்க் கட்சிகளுக்கு பதில் அளிக்கும் வகையில் தான் கருணாநிதியின்அறிக்கை அமைந்துள்ளது.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
கடந்த 1992ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது மத்தியில் ஆட்சியில் இருந்தவர்கள், அயோத்திக்கு அருகிலேயேராணுவத்தை வைத்துக் கொண்டு, இடிக்கும்வரை வேடிக்கை பார்த்தவர்கள் (காங்கிரஸ்), அப்படி ஒரு பிரச்சனை நடந்ததாகவேகண்டு கொள்ளாதவர்கள், தேசிய வளர்ச்சி மன்றக் குழுக் கூட்டத்திலேயே கரவேசவைக்கு ஆதரவாகப் பேசியவர்கள்,கரசேவைக்கு இங்கிருந்து ஆள் அனுப்பியவர்கள் போன்ற சிலர் (ஜெயலலிதா) இப்போது பாபர் மசூதிக்காக நீலிக்கண்ணீர்வடிக்கின்றனர்.
ஆனால், திமுகவைப் பொருத்தவரையில் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது அதைக் கண்டித்து என்ன உணர்வோடுசெயல்பட்டதோ, அதே உணர்வுடன் தான் என்றைக்கும் இருக்கும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி என்பது மதசார்பற்றது. இந்தக் கூட்டணியில் பல்வேறு கருத்துடைய கட்சிகள் இருக்கின்றன.பொதுவான பிரச்சனைகளில் ஒருமித்த கருத்து வரவேண்டுமே தவிர மேறு ஒரு கருத்து திணிக்கப்படுவதை ஏற்க இயலாது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுச் செயல் திட்டத்தில், இந்திய நாட்டு மக்கள் அனைவரது உணர்வுகளுக்கும்மதிப்பளிக்கப்படும், சிறுபான்மை மக்களுக்கு முழுப் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
மேலும் அயோத்திப் பிரச்சனை, பொதுவான சிவில் சட்டம், அரசியலமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவை நீக்குவது ஆகியவைதேசிய ஜனநாயகக் கூட்டணியின் செயல் திட்டத்தில் இடம் பெறாத விஷயங்கள்.
மனனவேற்றுமைகளுக்கு முற்றுப் புள்ளி வைப்போம் என்றும் தகராறுகளை உருவாக்கும் பிரச்சனைகளை ஒதுக்கி வைப்போம்என்றும் நாங்கள் சிறுபான்மை சமுதாயத்தினரை இருகரம் கூப்பி அழைத்து திருப்பத் திரும்பக் கூறுகிறோம். அரசியல் சட்டத்தில்சிறுபான்மையினருக்கு உண்டான அனைத்து உரிமைகளையும் நாங்கள் பாதுகாப்போம் என்று பிரகடனம் செய்கிறோம்.
சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த எங்களது அன்பான சகோதரர்களுக்கும் எங்களது நேசக்கரத்தை முழுமனதுடன் நீட்டி நாம்கைகோர்த்துக் கொண்டு புதிய உத்வேகம் நிறைந்த இந்தியாவை உருவாக்க இணைந்து பீடு நடைபோடுவோம் என்று தான் தேசியஜனநாயகக் கூட்டணியின் செயல்திட்டத்தில் கூறி இருக்கிறோம்.
எனவே, புதிதாக எதையும் இப்போது எழுப்புவது ஏற்கத்தக்கதல்ல.
திமுகவைப் பொறுத்தவரையில் என்றைக்கும்போல் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாகவும், பாசம் உள்ளதோழனாகவும் இருக்கும் என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துகிறேன்.


Click it and Unblock the Notifications
