இப்படியும் ஒரு தாய்

Subscribe to Oneindia Tamil

பண்ருட்டி:

தனது கள்ளக் காதலனுக்கே பெற்ற மகளைத் திருமணம் செய்து வைத்தார் தாய் உருவில் ஒரு பேய்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பலாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்துக் கவுண்டர். இவரது மனைவி திலகவதி.இவர்களின் மகள் சத்யா (வயது 16).

மாரிமுத்துவின் வீட்டில் திலகவதியின் உறவினர் மகாலிங்கம் (வயது 25) என்பவர் தங்கி இருந்து விவசாய வேலைகள் செய்துவந்தார். அப்போது திலகவதிக்கும் மகாலிங்கத்துக்கும் கள்ளக் காதல் ஏற்பட்டது.

மகாலிங்கத்துக்கு தனது மகள் சத்யாவை திருமணம் செய்து கொடுத்து அவரை வீட்டோடு மாப்பிள்ளை ஆக்கிக் கொள்ளதிலகவதி திட்டமிட்டார். ஆனால், தாயின் கள்ளக் காதலை அறிந்திருந்த சத்யா இந்தத் திருமணத்துக்கு மறுத்துவிட்டார்.

ஆனால், உனக்கு பரிகாரம் செய்ய வேண்டி உள்ளது எனக் கூறி சத்யாவை ஏர்வாடிக்கு அழைத்துச் சென்ற திலகவதி அங்குவைத்து மகாலிங்க்ததுக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்தார். இதையடுத்து அந்த வீட்டிலேயே இருக்க விரும்பாத சத்யா,தாலியை கழற்றி வீசிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

தாத்தா வீட்டிற்கு சென்று அங்கேயே தங்கினார். ஆனால், திலகவதி தனது மகளை விடவில்லை. அவளை தாத்தா வீட்டினர்கடத்திச் சென்றுவிட்டதாக போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து போலீசார் சத்யாவை தாத்தா வீட்டிலிருந்து அழைத்து வந்து பண்ருட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போதுநீதிபதியிடம் பேசிய சத்யா தனது தாயின் நடவடிக்கைகள், தனக்கு நடந்த கட்டாயத் திருமணம் மற்றும் அனைத்துவிவரங்களையும் தெரிவித்தார்.

இதனால் நீதிமன்றமே அதிர்ச்சியடைந்தது. சத்யாவை உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிபதி சிவதாணுஉத்தரவிட்டார்.

இந்த சம்பவம் பண்ருட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+