மகளிர் உலகக் கோப்பைக் கிரிக்கெட்: அரை இறுதியில் இந்தியா
கிரைஸ்ட் சர்ச் (நியூசிலாந்து):
உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணியை 141 ரன்கள்வித்தியாசத்தில் தோற்கடித்து அரை இறுதிக்கான தனது இடத்தை உறுதி செய்ததுஇந்தியா.
மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது .
லின்கோனில் வெள்ளிக்கிழமை இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான லீக்போட்டி நடந்தது. இதில் இந்திய அணி சிறப்பாக ஆடி 141 ரன்கள் வித்தியாசத்தில்இலங்கையை வென்றது.
இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டவர்கள் சந்திரகாந்த கவுலும் அணியின் துணைகேப்டன் அன்ஜும் சோப்ராவும் ஆவர். இருவரும் சேர்ந்து 151 ரன்கள் எடுத்தனர்.அன்ஜும் சோப்ரா 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
டாசில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. இந்திய அணியின்துவக்க ஆட்டக்கார்களாக கேப்டன் அஞ்சு ஜெயினும், ஸ்மிதா ஹரிகிருஷ்ணாவும்களமிறங்கினர்.
ஸ்மிதா 58 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். அவர் இந்திய அணியின் எண்ணிக்கை 51ரன்களாக இருந்த போது ஆட்டமிழந்தார்.
அதன் பின் சந்திரகாந்தாவும் அன்ஜூம் சோப்ராவும் ஜோடி சேர்ந்து இலங்கைபந்துவீச்சாளர்களை நிலை குலையச் செய்தனர். ஒரு முனையில் அன்ஜும் நிதானமாகஆடிக் கொண்டிருந்தார். மறுமுனையில் சந்திராகாந்தா ரன்களை குவித்துக்கொண்டிருந்தார்.
இந்தியத் தரப்பில் சந்திரகாந்தாதான் அதிக ரன்கள் எடுத்தார். அவர் 82 பந்துகளில் 80ரன்கள் குவித்தார். 8 பவுன்டரிகளை அவர் விளாசினார்.
சோப்ரா 104 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்தியா 230 ரன்கள் எடுத்தது.
இலங்கை அணி துவக்கம் முதலே விக்கெட்டுகளை பறிகொடுத்துக் கொண்டிருந்தது.அணியின் எண்ணிக்கை 1 ரன்னாக இருந்தபோதே இலங்கை 2 விக்கெட்டுகளைஇழந்து தவித்தது.
இலங்கை அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து கொண்டே இருந்தது. எந்தஜோடியும் நம்பிக்கையூட்டும்படியாக விளையாடவில்லை. ரன் அவுட் மூலமே 4விக்கெட்டுகளை இழந்தனர்.
அணிகளின் வரிசையில், மூன்றாவது இடத்தைப்பெற்றுள்ள இந்தியா அரை இறுதியில்,நியூசிலாந்து அணியுடன் மோதும். லீக் போட்டியில் இந்தியாவை, நியூசிலாந்துவீழ்த்தியுள்ளதால், அரை இறுதிப் போட்டி கடுமையாக இருக்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications