Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சூடு பிடிக்கிறது தமிழக தேர்தல் களம்

Subscribe to Oneindia Tamil

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே இருக்க தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

தமிழக அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் இப்பொழுது எழுந்துள்ள மாபெரும் கேள்வி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும், பாட்டாளி மக்கள் கட்சியும்எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்பதுதான்.

20 வருடங்களுக்கு முன்பு:

Jayalalithaகடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக, தமிழக தேர்தல் என்பது, இரு பிரிவுகளாகத்தான் பார்க்கப் படுகின்றது. அ.தி.மு.க , தி.மு.க என்ற இரு பெரும்திராவிட கழகத்தின் பின்னால் மற்ற கட்சிகள் அணிவகுத்து நிற்கும். தி.மு.கவா அ.தி.மு.கவா என்று தான் தேர்தல் சூடு பிடித்து களைகட்டும்.

கடந்த முப்பது ஆண்டுகளாக தி.மு.க அல்லது அ.தி.மு.க தான் தொடர்ச்சியாக தமிழகத்தை ஆண்டு வந்திருக்கிறது. காங்கிரஸ் தரப்பிலிருந்து ஆரம்பகாலத்தில் மூன்றாவது அணி என்று குரல் எழும்பியது.

இறுதியில், தி.மு.க அல்லது அ.தி.மு.க வுடன் கூட்டணி அமைத்துச் செயல்பட்டால் தான் கட்சியை காப்பாற்ற முடியும் என்கிற நிலையில், மூன்றாவதுஅணி முயற்சிகளை தூரத் தூக்கி போட்டு விட்டு தி.மு.க. அல்லது அ.தி.மு.க எதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி அமைத்துச் செயல்படும்.

தமாகா உதயம்:

Moopanarமூப்பனார் த.மா.கா ஆரம்பித்த பிறகு மூன்றாவது அணி பற்றிய ஆலோசனைகள் உதயமானது. 1995-ம் வருடம் த.மா.கா உதயமானது.அப்பொழுதே தலைவரிடம் சொன்னோம். தி.மு.க , அ.தி.மு.க இரு அணிகளையும் ஓரம் கட்டுவோம். த.மா.கா என்று தனியாக தேர்தலை சந்திப்போம்என்று எடுத்துக் கூறினோம்.

அன்று தி.மு.க வுக்கு எதிராக த.மா.கா செயல்படுவதை த.மா.கவில் உள்ள மூத்த தலைவர்களே விரும்பவில்லை. ரஜினியும், தி.மு.கவுடன் சேருவதையேவிரும்பினார். நமது ஒட்டு மொத்த எதிரி அ.தி.மு.க அதை எதிர்ப்போம்.

ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்போம் என்று களமிறங்கினோம். ஒரளவு வெற்றியும் பெற்றோம். ஆனால் தி.மு.க வுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு த.மா.காவை வளர்ப்பது என்பதும், எதிர்காலத்தில் காமராஜர் ஆட்சி என்கிற கனவும் உறுதியாக நிறைவேற்றிக் கொள்ள முடியாதுஎன்கிற நிலையிலும் தான் தி.மு.கவில் இருந்து வெளியே வந்தோம். மறுபடியும் அ.தி.மு.கவுடன் சேர வேண்டிய சூழ்நிலை.

இந்த தேர்தலிலும் தனியாக போட்டியிட முடியாது என்பது தெளிவாக தெரிந்த நிலையில் தான் அ.தி.மு.கவுடன் சேருவோம் என்று சேர்ந்திருக்கிறோம்என்று சொன்னார் த.மா.காவில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர்

த.மா.கவில் உள்ள இன்னொரு முக்கிய பிரமுகர் சற்று கோபமாகவே, நாங்கள் என்ன தியாகிகளா? தி.மு.கவோ அ.தி.மு.கவோ வெற்றி பெறவேண்டுமானால் எங்களது கூட்டணியில்லாமல் முடியாது.

இந்த நிலையில், அவர்கள் நாங்கள் செயல்பட வேண்டும். நாங்கள் ஒன்றும் தியாகிகள் அல்ல. வெற்றி பெற கடுமையாக உழைப்போம். அமைகின்றஆட்சியிலும் பங்கு வேண்டும். அதில்லாமல் நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றும் சொல்கிறார் அவர்.

சரி, அ.தி.மு.க தரப்பில் தான் ஆட்சியில் பங்கு நடக்காத காரியம் என்று சூளுரைத்துக் கொண்டிருக்கிறார்களே என்று கேட்டால் த.மா.கவினர் தரப்பில்இப்படி ஒரு பதில் வருகிறது. ஆரம்பத்தில் பிடிவாதமாக இருந்த அ.தி.மு.க தலைமை தற்பொழுது இறங்கி வந்திருக்கிறது.

தேர்தலுக்கு முன்பு ஆட்சியில் பங்கு பற்றி உறுதி செய்து கொண்ட பின்புதான் கூட்டணி பற்றி அறிவிப்போம். தற்பொழுது அ.தி.மு.கவுடன் தான்இருக்கிறோம். தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்கள் இருக்கிறது.

எங்கள் கூட்டணி மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று சொல்பவர்கள், நாகர்கோவிலில், கடந்த ஞாயிற்றுக்கிழமை குமரி மாவட்டமாநாட்டில் மூப்பனார் பேசியதையும் குறிப்பிடுகிறார்கள். தமிழகத்தில் அடுத்த அமையும் ஆட்சியில் த.மா.கா பங்கேற்கும் என்று குறிப்பிட்டார். எந்தஆட்சி அமையும் என்பது பற்றி அவர் சொல்லவில்லையே என்றும் சுட்டிக் காட்டுகிறார்கள்.

பாமக வின் நிலை என்ன?:

Ramdossகிட்டதட்ட பா.ம.க.வின் நிலையும் இதுதான். தமிழகத்தின் வட மாவட்டங்களில் அபரிதமான வாக்கு வங்கி பா.ம.க.வின் பலம். இந்த வாக்கு வங்கியைவாழப்பாடி ராமமூர்த்தியை வைத்து பிரிக்க முயற்சி செய்கிறார் கலைஞர் என்பதுதான் பா.ம.கவின் வருத்தம்.

இருந்தும் தனக்கென்று ஒரு செல்வாக்கு இருக்கிறது. பா.ம.க.வின் துணையில்லாமல் ஆட்சியமைப்பது என்பது எந்த கட்சியாலும் முடியாது என்பதில்உறுதியாக இருக்கிறார்கள்.

தற்பொழுது தி.மு.க கூட்டணியில் இருக்கும் பா.ம.க, வாழப்பாடியாரை கலைஞர் ஆதரிப்பதில் சற்று எரிச்சலுடனேயே பார்க்கிறது.

தங்களது எதிர்ப்பை மிக சைலண்ட்டாக சமீபத்தில் ஆண்டி மடத்தில் நடந்த பா.ம.க தொகுதி மாநாட்டில், ஆண்டிமடம் தொகுதி வெட்பாளராக பா.ம.கட்சியின்மாநில செயலாளராக காடுவெட்டிக்குருவை வேட்பாளராக அறிவித்தது.

திமுக வினர் ஆதங்கம்:

Karunanidhiதி.மு.க தரப்பில், கூட்டணிக் கட்சியில் இருந்து கொண்டு ராமதாஸ் எப்படி வேட்பாளரை அறிவிக்கலாம் என்கிற ஆதங்கம் எழுந்தது. இது வரைராமதாஸ் வேட்பாளர் அறிவிப்புக்கு எந்த பதிலையும் சொல்லவில்லை.

தமிழகத்தில் மூன்றாவது அணிக்கு வாய்ப்பு இல்லை. மூன்றாவது அணி உருவானால் அதில் சேரவும் மாட்டோம். வாழப்பாடி ராமமூர்த்தி எந்தகூட்டணியில் இருக்கிறாரோ அந்த கூட்டணியில் நாங்கள் சேர மாட்டோம் என்று வெளிப்படையாக அறிவித்திருக்கிறார் ராமதாஸ்.

வாழப்பாடி ராமமூர்த்தி தற்பொழுது, தி.மு.க கூட்டணியில் இருக்கிறார். இந்த நிலையிலும், ராமதாஸ் நாங்கள் தி.மு.க கூட்டணியில் தான் இப்பொழுதுஇருக்கிறோம். கலைஞரின் நான்கரையாண்டு கால ஆட்சி சிறப்பானதாகவே இருக்கிறது என்று வெளிப்படையாகச் சொன்னாலும், அ.தி.மு.கவுடன் கூட்டணிஅமைப்பது பற்றி பேச்சுக்கள் ஆரம்பமாகிவிட்டது என்கிறார்கள் பா.ம.க.வில்.

டாக்டர் ராமதாஸின் மகன் அன்புமணியும், தி.மு.கழக எம்.பியான தினகரனும் இது வரை மூன்று முறை சந்தித்துப் பேசி விட்டார்கள். தொகுதி பங்கீடு,எதிர்கால செயல்பாடுகள் என்று பல கோணங்களில் அலசப்பட்டும் வருகிறதாம்.

தி.மு.கவில் இருந்து பா.ம.க தனாக வெளியேறினால் தேர்தல் நேரத்தில் அதையே தி.மு.க பிரச்சாரமாக ஆக்கி விடுவார்கள். இதற்கு சந்தர்ப்பம்கொடுத்து விடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கும் ராமதாஸ், தி.மு.கவே பா.ம.கவுடன் கூட்டணி முறிந்தது என்று அறிவிக்கட்டும் என்றும்காத்திருக்கிறாராம்.

களமிறங்குகிறார் ராமதாஸின் வாரிசு:

பா.ம.க தரப்பில் இன்னொரு உற்சாகம் இருக்கிறது. ராமதாஸின் மகன் அன்புமணி இந்த தேர்தலில் நேரடியாக களமிறங்குகிறார்.

இவருக்கென, கடலூர் மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் அனைத்துமே தயார். அன்பு மணி, எங்கள் இளைய தலைவர். இந்த மாவட்டத்தில் எந்ததொகுதியில் நின்றாலும் நாங்கள் அவரிடம் வெற்றிக் கனியை கொடுப்போம் என்றும் உற்சாகம் பூரிக்கச் சொல்கிறார்கள் பா.மகவினர்.

ஆக விரைவில், தற்பொழுது கூட்டணி கட்சிகளில் இருக்கின்ற த.மா.கவும், பா.ம.கவும் எதிர் எதிர் அணிக்கு தாவுகின்ற சூழ்நிலையே தற்பொழுதுநிலவுகிறது என்கிறார்கள் தமிழக அரசியல் பார்வையாளர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+