மாலத்தீவிலிருந்து தமிழக மீனவர்கள் விடுதலை
சென்னை:
மாலத்தீவில் சிறை வைக்கப்பட்டுள்ள கன்னியாக்குமரியைச் சேர்ந்த 8 மீனவர்கள் ரம்ஜான் மாதம் முடிந்தவுடன் விடுவிக்கப்படுவார்கள் என்று மத்தியஇளைஞர் நலத்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
சென்னையில் அமைச்சர் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
கன்னியாக்குமரியைச் சேர்ந்த மீனவர்கள் சிலர், மாலத்தீவு எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இந்த 8 மீனவர்களையும் மாலத்தீவுகடற்படை அதிகாரிகள் பிடித்துச் சென்றனர்.
அவர்களை விடுவிக்க வேண்டும் என்று நான் இந்திய தூதரகத்திடம் கேட்டுக் கொண்டேன். அதன்படி இந்தியத் தூதரகம் மாலத்தீவு கடற்படைஅதிகாரிகளை சந்தித்துப் பேசியது.
மாலத்தீவு அரசு, தமிழக மீனவர்களை ரம்ஜான் மாதம் முடிவடையும் சமயத்தில் விடுவிக்கிறோம் என்று கூறியது. அவர்கள் அடுத்த மாதம்மீனவர்களை விடுவிப்பார்கள் என்று நம்புகிறேன்.
மேலும் இந்திய உயர் அதிகாரிகள் மாலத்தீவு சிறைக்குச் சென்று, தமிழக மீனவர்களைப் பார்த்தார். அவர்கள் நலமுடன் இருப்பதாகத் தெரிவித்தார்.
மாலத்தீவு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் பெயர் ராஜன், ஹெல்வின், அந்தோணி, சேஷய்யன்,மெல்டன், சேவியர், ஜான் பாஸ்க் மற்றும் லாரன்ஸ். இவர்கள் அனைவரும் குமரி மாவட்டத்திலுள்ள புத்தேன்துறைகிராமத்தைச் சேர்ந்தவர்கள்.
கடந்த நவம்பர் 12 ம் தேதி இவர்கள் அனைவரும் இயந்திரப்படகில் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். அப்போதுஅவர்கள் யாரையும் காணவில்லை என்று போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது என்றார் பொன் ராதாகிருஷ்ணன்.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications