கோவையில் மினி மாரத்தான் போட்டி

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோவை மெடிக்கல் சென்டர் அன்ட் ஹாஸ்பிடல் (கே.எம்.சி.எச்) சார்பில் மினி மாரத்தான் போட்டி நடந்தது. உடல் நலத்தை வலியுறுத்தும் இந்தப் போட்டியில்700 பேர் கலந்து கொண்டனர்.

கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் ஹாஸ்பிடல் சார்பாக மினி மாரத்தான் போட்டி நடந்தது. இந்தப் போட்டி கோவை ராம்நகரில் துவங்கியது.

அதிகாலையில் துவங்கிய இப்போட்டியை கேஎம்சிஎச் சேர்மன் நல்ல பழனிச்சாமி துவக்கி வைத்தார். ஆலோசகர் அனந்த பத்மநாபன் பங்கேற்றார்.

சுமார் 12 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இப்போட்டி, கோவை மெடிக்கல் சென்டரில் முடிந்தது. அனைவரும் உடல் பயிற்சி செய்ய வேண்டும். உடல்பயிற்சியில் ஓட்டம் ஒரு முக்கிய பங்கு வகிக்கக் கூடியது என்பதால், இதனை ஒவ்வொரு ஆண்டும் கே.எம்.சி.எச். நடத்தி வருகிறது.

இந்தப் போட்டியில் 700 பேர் கலந்து கொண்டு ஓடினர். அதிகாலையில் கடும் குளிரையும் பொருட்படுத்தாது இந்தப் போட்டியில் பொதுமக்கள்பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விபரம் பின்னர் அறிவிக்கப்படவுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+