மசூதி மீது தாக்குதல்: திருநெல்வேலியில் இன்று பந்த்
பாளையங்கோட்டை:
பாளையங்கோட்டையில் மசூதியில் கொலை நடந்ததையடுத்து திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் இன்று (திங்கள்கிழமை)பந்த் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் உள்ள கிரஸண்ட் நகர் மஜீத் மரியம் அல்பீல் பள்ளிவாசல் மீது சனிக்கிழமைநள்ளிரவில் ஒரு கும்பல் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. பின்னர் பள்ளிவாசலுக்குள் நுழைந்த அந்தக் கும்பல்உள்ளே இருந்தவர்களை கத்தி, அரிவாள்களால் தாக்கியது. இதில் தப்லீக் ஜாமாத்தை சேர்ந்த அப்துல் ரஷீத் என்பவர்கொல்லப்பட்டார்.
இவரது உடல் அடக்கம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்தது. இவரது கொலைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையி திருநெல்வேலிமாவட்டம் முழுவதும் பல இடங்களில் கண்டன பேரணிகள் நடந்தன. தென்காசியில் நடந்த ஊர்வலத்தில் அதிக அளவிலானபெண்களும் கலந்து கொண்டனர்.
பஸ்கள் மீது கல்வீச்சு:
பள்ளிவாசல் தாக்கப்பட்டதையடுத்து தென்காசியில் 2 அரசுப் பேருந்துகள் மீதும். சங்கரன்கோவிலில் ஒரு அரசு பஸ் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடந்தது. இதில் 3 பஸ்களும் சேதமடைந்தன. அந்த மாவட்டம் முழுவதுமே பதட்டம் நிலவுவதால் போலீசார்குவிக்கப்பட்டுள்ளனர்.
மசூதி மீது தாக்குதல் குறித்து தகவல் அறிந்தவுடன் தமிழக தென் மண்டல காவல்துறைத் தலைவர் விபாகர் சர்மாதிருநெல்வேலிக்கு விரைந்தார். அங்கேயே முகாமிட்டு நிலைமையைக் கண்காணித்து வருகிறார்.
4 போலீஸ் படைகள்:
பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தியவர்களைப் பிடிக்க 4 சிறப்பு போலீஸ் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்பட்ட பகைகாரணமாக இந்தக் கொலையும் தாக்குதலும் நடந்ததால் அல்லது வேறு காரணம் தான் தாக்குதலுக்கு வித்திட்டதா என்பதை இந்தப்படையினர் விசாரித்து கொலையாளிகளைப் பிடிப்பர்.
அமைச்சர் ரகுமான்கான்:
மசூதி மீதான தாக்குதல் சம்பவம் குறித்து கேள்விப்பட்ட உடன் அமைச்சர் ரகுமான் கானை முதல்வர் கருணாநிதிபாளையம்கோட்டைக்கு அனுப்பினார். பள்ளி வாசலை பார்வையிட்ட அமைச்சர், பின்னர் இஸ்லாமிய தலைவர்களுடனும் பேச்சுநடத்தினார்.
கொலையாளிகள் நிச்சயம் பிடிக்கப்படுவார்கள் என உறுதியளித்த அவர், கொலையான அப்துல் ரஷீதின் குடும்பத்தினருக்குஉதவித் தொகையும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் கிடைக்க முதல்வர் கருணாநிதியுடன் பேசுவேன் என்றார்.மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பந்த்:
பள்ளிவாசல் மீதான தாக்குதல், கொலை ஆகியவற்றைக் கண்டித்து திருநெல்வேலி மாவட்டத்தில் திங்கள்கிழமை பந்த் நடத்த பலமுஸ்லீம் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இதையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் கைது செய்யப்படாவிட்டால் மாநிலம் முழுவதும் பந்த் நடத்தப்படும் என முஸ்லீம் முன்னேற்றக் கழகம்கூறியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications