அயோத்தி விவகாரம்: நாடாளுமன்றம் மீண்டும் ஸ்தம்பிப்பு
டெல்லி:
அயோத்தி விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக சபாநாயகர் பாலயோகி திங்கள்கிழமை கூட்டியிருந்த அனைத்துக் கட்சி கூட்டம் தோல்வியில் முடிந்தது.
இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 5 வது நாளாக திங்கள்கிழமையும் ஒத்தி வைக்கப்பட்டது.
அவை கூடியதும், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், அயோத்தி விவகாரம் தொடர்பாக வாஜ்பாய் கருத்து தெரிவித்ததற்கு அவர்மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். இதை பகுஜன் சமாஜ்வாடி கட்சியும் ஆமோதித்தது. இதனால் அவையில் தொடர்ந்து கூச்சலும், குழப்பமும்ஏற்பட்டது.
தெலுகு தேச கட்சி எம்.பி.எர்ரா நாயுடு கூறுகையில், நாட்டின் பாதுகாப்பு தான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. விவாதத்தின் போது 3 அமைச்சர்கள்ராஜினாமா செய்வது குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்றார்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தங்களது பிடிவாதத்தைத் தளர்த்திக் கொள்ளாததையடுத்து அவை திங்கள்கிழமையும் கூடிய சில நிமிடங்களிலேயே ஒத்திவைக்கப்பட்டது.
மசூதி இடிப்பு ஒரு முன்னோட்டம்:
1992 ம் வருடம் அயோத்தியில் பாபர் மசூதி இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. இச்சம்பவத்தின் போது அயோத்தியில் இருந்த மத்திய அமைச்சர்கள்அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள்நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி வருகின்றன.
ஆனால் பிரதமர் வாஜ்பாயோ அவர்களுக்கும், பாபர் மசூதி இடிப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மசூதி இடிக்கப்படாமல் தடுத்து நிறுத்தவேஅவர்கள் அங்கு சென்றனர். மேலும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது ஒரு தேசிய உணர்வு. இதனால்ராமர் கோவில் கட்டப்படுவதற்கான வேலைகள் தொடங்கும். மேலும் வேறு இடத்தில் மசூதி கட்டுவதற்கான அனுமதி வழங்கப்படும் என்றார்.
புயலைக் கிளப்பிய பேச்சு:
வாஜ்பாயின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. பல கட்சித் தலைவர்கள் வாஜ்பாயின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்தனர். தேசிய ஜனநாயகக்கட்சியில் அங்கம் வகிக்கும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறுகையில், அயோத்தி பிரச்சனை சுப்ரீம் கோர்ட்டில் இருக்கும்போது அது குறித்துகருத்துத் தெரிவிப்பதற்கு பிரதமர் உள்பட யாருக்கும் உரிமை கிடையாது என்றார்.
இப்பிரச்சனை குறித்து காங்கிரஸ் கட்சி மீண்டும், மீண்டும் கேள்வி எழுப்பியதால் கடந்த வாரம் முழுவதும் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.இருப்பினும், பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்துக்குக் காரணமான 3 அமைச்சர்களும் பதவி விலக வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் பிடிவாதமாகஉள்ளன.
தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிக் கூட்டம்:
முன்னதாக, அயோத்தி விவகாரம் குறித்து பிரதமர் தனது கருத்தை கூட்டணிக் கட்சிகளுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று திரினாமூல் காங்கிரஸ்மற்றும் தெலுகு தேச கட்சிகள் வலியுறுத்தின.
அதன்படி தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியின் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை டெல்லியில் கூடியது. இதில் 21 கூட்டணிக் கட்சிகள் கலந்துகொண்டன. இதில் கலந்து கொண்ட வாஜ்பாய் பேசுகையில், நான் அயோத்தி பிரச்சனை குறித்து எந்த உள்நோக்கத்துடனும் தெரிவிக்கவில்லை.
அயோத்தி விவகாரத்திற்குப் பொறுப்பேற்று 3 அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டிய நிர்பந்தம் எதுவும் இல்லை. அயோத்தி விவகாரத்தில்சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்றார். இதையடுத்து கூட்டணிக் கட்சிகள் அனைவரும் வாஜ்பாயின் முடிவுக்குக்கட்டுப்படுவதாக அறிவித்தன. இதையடுத்து அயோத்தி விவகாரம் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் திங்கள்கிழமை கூடி விவாதிக்கும் என்றுசபாநாயகர் பாலயோகி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications