கோயில் பணியாளர்களுக்கு ஓய்வூதியம்
சென்னை:
அர்ச்சகர்கள், ஓதுவார்களுக்கு வழங்கப்படுவது போல் கோயில்களில் பணிபுரியும் மற்ற ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கான திட்டத்தை தீட்டி ஓராண்டிற்குள் செயல்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிெல்லை மாவட்டம், அம்பாசத்திரம் திருக்கோயில் பணியாளர்கள் சங்கம் சார்பில் கடந்த 98-ம் ஆண்டு திருக்கோயில்களில் பணிபுரியும் குமாஸ்தாக்கள்,சமையல் பணியாளர்கள் ஆகியோருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீது நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யாததால் அரசுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழகஅரசு அப்பீல் மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.சம்பத், அர்ச்சகர்கள் மற்றும் ஓதுவார்களுக்கு வழங்கப்படுவது போலவேதிருக்கோயில்களில் பணியாற்றும் மற்ற ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டுமென்று இந்து அறநிலத்துறைக்கு உத்திரவிட்டார்.
இந்த உத்தரவை ஓராண்டிற்குள் திட்டம் ஒன்றைத் தீட்டி செயல்படுத்த வேண்டுமென்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications