மாயாவி வீரப்பன்
கோவை:
வீரப்பனைத் தேடிப் பிடிக்க அதிரடிப்படை ஈடுபட்டிருந்த போதிலும், இம்முறை பிடித்தே தீர வேண்டும் என்ற இருமாநில அரசுகளின் தீவிரத்திற்கு ஈடு கொடுக்க எல்லைப் பாதுகாப்பு படையினர் சில நாட்களில் தமிழகக் காடுகளில்முற்றுகையிட உள்ளனர்.
ஆனால், திக்குத் தெரியாத காட்டில் "மாயாவி வீரப்பன் எப்படி மாயமாக மறைந்து விட்டான் என்பது தான்இப்போது அதிரடிப்படைகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ராஜ்குமார் கடத்தல்:
கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திச் செல்லப்பட்ட பிறகு, வீரப்பனை நக்கீரன் கோபாலோ, மற்றதூதுக்குழுவினரோ எளிதாகச் சென்று சந்தித்து வந்தனர். மலைப் பகுதிகளின் எளிதான பகுதியில் பிணைக்கைதியான "ராஜ்குமார் இருந்ததால் இது எளிதாக முடிந்தது.
ஆனால், ராஜ்குமார் விடுவிக்கப்பட்ட உடனேயே வீரப்பன் மாயமாக மறைந்து விட்டான். அவ்வாறு வேறுஇடத்திற்கு இடம் பெயர, அவனுக்குப் போதுமான கால அவகாசம் இருந்தது என்பது தான் உண்மை.
ராஜ்குமாரை விடுவித்த அடுத்த சில மணிநேரங்களில் சோதனையிட்டிருந்தால், நிச்சயம் அதிரடிப்படைக்கே வெற்றிகிட்டியிருக்கும். அரசு முடிவெடுக்க இரண்டு நாட்களுக்கும் மேல் ஏற்பட்ட தாமதம், வீரப்பனுக்குச் சாதகமாகஅமைந்தது. இதனால் வேகமாக வீரப்பன் இடம் பெயர்ந்து விட்டான். அடுத்த இரண்டு நாட்கள் நிலவிய மழை,வீரப்பனுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தியது.
கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல்:
இப்போது எங்கே வீரப்பன் எனத் தேடி அலையும் நிலைதா ன் அதிரடிப்படை வீரர்களுக்கு உருவாகியுள்ளது."கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல ஆறாயிரம் சதுர மீட்டர்கள் உள்ள அடர்ந்த சத்தி வனப்பகுதியில்தேடுதல் வேட்டையைத் துவங்கியுள்ளனர்.
இந்த தேடுதல் வேட்டையில் உளவுப் பிரிவும் ஈடுபட்டுள்ளது.
ஆனால், வீரப்பன் மறைந்த இடம் எங்கே? அவன் சென்ற இடம் எது? என்பது போன்ற கேள்விகளுக்குச் சிறியதடயம் கூட உளவுப் பிரிவிற்கு கிடைக்கவில்லை என்பது தான் வியப்பிற்குரியது. வீரப்பன் நடமாட்டம் காடுகளில்உள்ளதா என்பது கூட சந்தேகமே.
வீரப்பன் குறிப்பிட்ட ஒரு குகைக்குள் பதுங்கியிருந்தால், எல்லைப் பாதுகாப்பு படை உட்பட அதிரடிப்படையினரின்தேடுதல் வேட்டை அத்தனையும் அர்த்தமற்றதாகி விடும்.
எனவே, அதிரடிப்படையினரும் தங்களுக்கு நம்பகமான தகவல்கள் வரும் வரை வெறும் பயிற்சி நடவடிக்கைகளில்மட்டுமே ஈடுபட்டு வருகின்றனர் என்பதே உண்மை.
வீரப்பனின் இருப்பிடம் கண்டறியப்பட்டு சுற்றி வளைக்கப்பட்டு விட்டால், அவன் எந்த வழியாகத் தப்பிச் செல்லவாய்ப்பு உள்ளது என்பது குறித்து அதிரடிப்படை அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.அதே சமயம், கண்டறியப்படும் வழிகள் மற்றும் வீரப்பன் செல்ல வாய்ப்புள்ள பகுதிகளுக்கு அதிரடிப்படைவீரர்களை அனுப்பி வருகின்றனர். இந்த அதிரடிப்படை வீரர்கள், வீரப்பனைத் தேடா விட்டாலும், காடுகளில்உள்ள வழிகளைத் தெரிந்து கொண்டு வருகின்றனர்.
ஜங்கிள் ஸ்ட்ரோம் ஆபரேஷன்:
அதே சமயம், எல்லைப் பாதுகாப்பு பணியின் படைப் பிரிவுகள் ஒவ்வொன்றாக வந்து காட்டுப் பகுதியை ஆராயத்தொடங்கியுள்ளது. எல்லைப் பாதுகாப்பு படையினரின் முன்யோசனை, வியூகம், புதிய யுக்திகள் ஆகியவற்றுடன்அதிர்ஷ்டம் இருந்தால் வீரப்பனைப் பிடிப்பது எளிதான காரியமாகும். இப்படையினர் தங்களது ஆபரேஷனுக்கு"ஜங்கிள் ஸ்ட்ரோம் ஆபரேஷன் எனப் பெயரிட்டுள்ளனர்.
இப்படைகளின் உளவுப் பிரிவுகளை விட, வீரப்பனுக்கு ஆதிவாசி கிராம மக்களின் உளவுத் தகவல்கள் சாதகமானசூழ்நிலையை உருவாக்கித் தந்துள்ளது. பிரிவினை வாத சக்திகளும் வீரப்பனுடன் இணைந்துள்ள சூழ்நிலையில்இந்த முறை தோல்வி என்ற நிலை ஏற்பட்டால், தீவிரவாதத்திற்கு அது வித்தாகி விடும் என்பதில் சந்தேகமில்லை.












Click it and Unblock the Notifications