வீரப்பனைப் பிடிக்க நவீன ஆயுதங்கள் ஈரோடு வருகை
ஈரோடு:
வீரப்பனைப் பிடிக்க எல்லைப் பாதுகாப்பு படையினரின் ஆயுதங்கள் ஈரோடு வந்து சேர்ந்தன. 158 பெட்டிகளில்கையெறி குண்டு, கண்ணி வெடிகளை அகற்றும் கருவி, ஏ.கே 47 ரகத் துப்பாக்கி உட்பட நவீன ஆயுதங்கள் இந்தப்பெட்டியில் வந்து சேர்ந்தன.
கோவை அருகே சூலூரில் உள்ள விமானப் படைத் தளத்தில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் வந்திறங்குவர்என எதிர்பார்க்கப்படுகிறது.
துப்பாக்கியும், கையுமாக:
வீரப்பனைப் பிடிக்க மத்திய அரசின் உதவியாக எல்லைப் பாதுகாப்பு படை காட்டுக்குள் இறங்கவுள்ளது. இந்தப்படையினர் தீவிரமாக "வீரப்பனைப் பிடிக்க துப்பாக்கியும் கையுமாக வேட்டையைத் துவங்குகின்றனர்.
இதற்கு முதற்கட்டமாக எல்லைப் பாதுகாப்பு படையினர் பயன்படுத்த நவீன ஆயுதங்கள் ஈரோட்டிற்கு இன்று வந்துசேர்ந்தன. இந்த ஆயுதங்கள் 158 மரப் பெட்டிகளில் அடைக்கப்பட்டு, ரயிலில் திங்கள்கிழமை அதிகாலை வந்துஇறங்கியது.
கேரள எக்ஸ்பிரசில் வந்திறங்கிய இந்த ஆயுதங்கள் விரைவில் லாரியில் ஏற்றப்பட்டு பண்ணாரி முகாமிற்குக்கொண்டு செல்லப்படும்.
இந்த ஆயுதங்கள் டில்லியிலிருந்து கடந்த டிசம்பர் 9ம் தேதி ரயிலில் ஏற்றப்பட்டு ஈரோடு வந்து சேர்ந்துள்ளது.இதில் கையெறி குண்டுகள், ஏ.கே 47 ரகத் துப்பாக்கிகள், தோட்டாக்கள், இருட்டிலும் எதிரியை அடையாளம்கண்டு தாக்கக் கூடிய வகையில் பைனாகுலர் கருவிகள், ஆகியவை இதில் அடங்கும்.
அதிரடிப்படையின் தேடுதல் வேட்டை:
இந்நிலையில் அதிரடிப்படையினர் தேடுதல் வேட்டையை நீலகிரி மலைப் பகுதியில் மேற் கொண்டுள்ளனர்.மேலும், எஸ். பி சைலேந்திரபாபு, அசோக்குமார் தாஸ், கர்நாடக அதிரடிப்படை டி.ஐ.ஜி ஹர்ஷவர்த்தன ராஜூ,இன்ஸ்பெக்டர் மோகன் நிவாஸ் ஆகியோர் இன்றும் ஆலோசனை மேற் கொண்டனர்.
இந்நிலையில் கோவைக்கு மத்திய எல்லைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த வீரர்கள் தனி விமானத்தில் சூலூர்விமானப் படைத் தளத்தில் வந்திறங்கவுள்ளனர். விமானத்தில் வரும் அவர்கள், பண்ணாரிக் காட்டிற்கு அழைத்துச்செல்லப்படுவர்.
இவர்களை வழி நடத்திச் செல்லும் பணிக்காக எல்லைப் பாதுகாப்பு படைத் தலைவர் விஜயகுமார் ஏற்கனவேரயிலில் வந்து கோவையில் முகாமிட்டுள்ளார்.
விமானத்தில் 300க்கும் குறையாத வீரர்கள் முதற்கட்டமாக வந்து சேருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் சூலூர் விமானப் படைத் தளம் முழுவதும் பலத்த பாதுகாப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications