பெப்சி கோப்பையை வென்றது இந்தியா
கான்பூர்:
இந்திய - ஜிம்பாப்வே-க்கு இடையே நடைபெற்ற நான்காவது ஒரு நாள் போட்டியில் இந்தியா வென்று பெப்சிகோப்பையை கைப்பற்றியது.
இந்தியாவுக்கும், ஜிம்பாப்வேக்கும் இடையே நான்காவது ஒரு நாள் போட்டி கான்பூரில் இருக்கும் கிரீன் பார்க்மைதானத்தில் திங்கள்கிழமை நடந்தது. இந்த போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்று பெப்சி கோப்பையைகைப்பற்றியது.
5 தொடர்கள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் 2 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றது. 3-வது போட்டியில்ஜிம்பாப்வே வெற்றி பெற்றது. இந்த நிலையில் நான்காவது போட்டி மிகவும் முக்கியமானதாக கருதப்பட்டது.
2-1 என்ற நிலையில் இந்தியா முன்னணியில் இருந்தாலும் நான்காவது போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றால்2-2 என்ற சமன் நிலைக்கு வந்துவிடும்.
அதன் பின் ஐந்தாவது போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே கோப்பையை இந்தியா கைப்பற்ற முடியும் என்றநிலைக்கு தள்ளப்பட்டு ஐந்தாவது போட்டியில் வெற்றி பெற கடுமையாக போராட வேண்டிய நிலை ஏற்படும்.எனவே இந்த போட்டி இரு நாடுகளுக்குமே முக்கியமானதாக கருதப்பட்டது.
திங்கள் கிழமை போட்டியில் டாசில் வென்ற ஜிம்பாப்வே முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. ஆனால் துவக்கம்முதலே அவர்கள் ஆட்டம் சுறுசுறுப்பாக இல்லை.
கான்பூரின் கிரீன்பார்க் விளையாட்டு அரங்கம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானதாக கருதப்பட்டது. ஆனால் அதுஇந்தியர்களுக்கு மட்டுமே சாதகமானது போல் இருந்தது. ஜிம்பாப்வே அணியினரால் அதிகமான ரன்கள் எடுக்கமுடியவில்லை.
அணியின் எண்ணிக்கை 60 ஆக இருந்தபோது முதல் விக்கெட்டை இழந்தனர். அணியின் துவக்க ஆட்டக்காரரானகாம்ப்பெல் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இவருடன் ஜோடி சேர்ந்து துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய மடோன்டோவும் 32 ரன்கள் எடுத்திருந்தபோதுஆட்டமிழந்தார். அப்போது அணியின் எண்ணிக்கை 71.
அதன் பின் வந்த எவரும் குறிப்பிட்டு கூறும் படியாக சிறப்பாக விளையாடவில்லை. அணியின் நம்பிக்கைநட்சத்திரமான ஆன்டி ஃப்ளாவரும் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து விக்கெட்டுகளை வரிசையாக இழந்து வந்தது. இறுதியில் 45.4 ஓவர்களில் அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்து ஜிம்பாப்வேயால் 165 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்ததது.
ஜிம்பாப்வேயின் இந்த குறைந்த ரன்களை இந்தியா மிக எளிதாக எடுக்க முடியும் என்பதால் ரசிகர்கள் அப்போதேஇந்தியாவின் வெற்றியை கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.
இந்திய தரப்பில் அணித்தலைவர் கங்குலி மிகச் சிறப்பாக பந்து வீசினார்.
கங்குலி 10 ஓவர்களில் 36 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.அவருக்கு உறுதுணையாக அஜீத்அகார்கார் சிறப்பாக பந்து வீசி 9.5 ஓவர்களில் 27 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக அணித்தலைவர் கங்குலியும், சச்சின் டெண்டுல்கரும் களமிறங்கினர்.
அவர்களின் சிறப்பான ஆட்டம் ஜிம்பாப்வே நிச்சயம் வெற்றி பெற முடியாது என உறுதி செய்யும் விதமாகஅமைந்தது.
டெண்டுல்கர் வழக்கம் போல் அதிரடியாக ஆடினர். ஆனால் அவர் 62 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார்.அப்போது அணியின் எண்ணிக்கை 157. இன்னும் 8 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஸ்ரீராம்கங்குலியுடன் ஜோடி சேர்ந்தார். அவர் ஒரு ரன் எடுத்தார்.
இந்தியா 25 ஒவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 165 ரன்களை எடுத்து இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றது.
கங்குலி 68 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கங்குலி இன்றைய ஆட்டத்தின் சிறந்தஆட்டக்காரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜிம்பாப்வே தரப்பில் ஓலோங்கோ 5 ஒவர்களில் 40 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார்.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் 5 தொடர்கள் கொண்ட போட்டியில் 3-1 என்ற புள்ளிக் கணக்கில்இந்தியா பெப்சி கோப்பையை கைப்பற்றியது.
டிசம்பர் மாதம் 14-ம் தேதி ராஜ்காட்டில் நடக்கவிருக்கும் 5-வது இறுதி போட்டியில் யார் வெற்றி பெற்றாலும் அதுபெரும் பாதிப்பை ஏற்படுத்தாது என்பதால் அந்த போட்டிக்கு அவ்வளவாக முக்கியத்துவம் இருக்காது.












Click it and Unblock the Notifications