ஜே.எச்.படேல் மறைவு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

J.H.Patelஉடல் நிலை சரியில்லாத காரணத்தால் பெங்களூர் மணிப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கர்நாடக முன்னாள் முதல்வரும்,ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான ஜே.எச்.படேல் செவ்வாய்க்கிழமை அதிகாலை மரணமடைந்தார்.

அவருக்கு வயது 71. அவருக்கு மனைவியும், மூன்று மகன்களும் உள்ளனர்.

அவர் லிவரில் ஏற்பட்ட கோளாறு மற்றும் முதுகு வலி காரணமாக மணிப்பால் மருத்துவமனையில் கடந்த டிசம்பர் 1 ம் தேதி சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தார். அங்குள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

உடல் நிலை மோசமடைந்தது:

கடந்த இரண்டு நாட்களில் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

அவர் தொடர்ந்து மணிப்பால் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவிலேயே சிகிச்சை பெற்று வந்தார். அவரைப் பார்ப்பதற்கு அவரது குடும்பஉறுப்பினர்கள் தவிர யாரும் மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் அவர் செவ்வாய்க்கிழமை காலை மரணமடைந்தார்.

ஜே.எச்.படேல் கர்நாட மாநிலத்தின் 15 வது முதலமைச்சராக இருந்தவர்.

பள்ளி, கல்லூரிகள் விடுமுறை:

கர்நாடக முன்னாள் முதல்வர் ஜே.எச்.பட்டேல் மறைவையடுத்து பெங்களூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுஅலுவலகங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

உடல் அடக்கம்:

படேலின் உடல் முழு அரசு மரியாதையுடன் அவரது சொந்த ஊரான, தாவண்கரே மாவட்டத்திலுள்ள கர்கானூர் கிராமத்தில் அடக்கம் செய்யப்படும்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+