மேட்ச் ஃபிக்சிங்: நிகில் சோப்ராவிடம் விசாரணை
சென்னை:
நிகில் சோப்ராவை விசாரித்த ஊழல் தடுப்பு கமிஷனர் மாதவன் தனது அறிக்கையை விரைவில் சமர்ப்பிப்பதாக கூறியிருக்கிறார்.
ஆனால் இறுதி அறிக்கை கபில்தேவையும், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் அஜீத் வடேக்கரையும் விசாரித்த பின் சமர்பிக்கப்படும்என்றார்.
கிரிக்கெட் சூதாட்டம் குறித்து சி.பி.ஐ குற்றம் சாட்டியவர்களை விசாரிக்க கிரிக்கெட் வாரியம் முன்னாள் சி.பி.ஐ. இணை இயக்கநர் மாதவனை நியமித்தது.
அவர் கொடுத்த அறிக்கையின் படி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அசாருதீன் மற்றும் அஜய் சர்மாவுக்கு கிரிக்கெட் வாரியம் வாழ் நாள்தடை விதித்தது.
மனோஜ் பிரபாகருக்கும், அஜய் ஜடேஜாவுக்கும் 5 ஆண்டு தடை விதித்தது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் முத்தையாகேட்டுக் கொண்டபடி மாதவன், நிகில் சோப்ராவை சென்னையில் செவ்வாய்கிழமை விசாரணை செய்தார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், சோப்ரா என்னிடம் சில ஆவணங்களை நான் பார்வையிடுவதற்காக கொடுத்துள்ளார். சோப்ரா எந்த விதமானகவலையிலோ டென்ஷனிலோ இல்லை. மிகவும் சாதரணமாகத்தான் இருந்தார்.
டெல்லி சென்ற பின் கபில்தேவையும், அஜித் வடேகரையும் டிசம்பர் 30-ம் தேதி விசாரித்த பின் எனது அறிக்கையை அடுத்த ஆண்டு ஜனவரி 31-ம் தேதிசமர்பிப்பேன்.
கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சி.பி.ஐ. தெரிவித்த தகவலைத் தவிர வேறு தகவல்களை திரட்டும்படி கேட்கவில்லை. ஆனால் என் விசாரணையின்போது தகவல்கள் கிடைத்தால் அதை ஒதுக்க மாட்டேன்.
நான் கிரிக்கெட் வாரியத்திற்கு அளித்த அறிக்கையில் எவ்வாறு மேட்ச் ஃபிக்சிங்கை தடுப்பது என்பது குறித்து சில யோசனைகள் கூறியிருந்தேன்.சி.பி.ஐ.யும் தனது அறிக்கையில் சில யோசனைகளை கூறியிருந்ததது.
தற்போது கொடுக்கப்பட்டுள்ள தண்டனை மேட்ச்ஃபிக்சிங்கை முடிவு கொண்டு வருமா என்பதை விட சில ஆண்டுகளுக்காகவாவது இந்திய விளையாட்டுவீரர்களை மேட்ச்ஃபிக்சிங்கில் ஈடுபடாமல் தடுக்கும் என்பது நிச்சயம்.
சோப்ராவிடம் விசாரித்த பிறகு வேறு ஏதேனும் புதிய தகவல்கள் கிடைத்ததா என நிருபர்கள் கேட்டபோது அதற்கு பதிலளிக்க மாதவன் மறுத்துவிட்டார்.
சி.பி.ஐ.யால் குற்றமற்றவர்கள் என கூறப்பட்டவர்களை விசாரிக்க வேண்டுமா என நிருபர்கள் கேட்ட போது கிரிக்கெட் வாரியம் என்னைவிசாரிக்க சொன்னதால் விசாரிக்கிறேன். ன் அறிக்கையை அவர்களிடம் சமர்பிப்பேன் என பதிலளித்தார்.
நிகில் சோப்ராவும் தனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications