ஈழவேந்தன் நாடுகடத்தல்: நெடுமாறன் போராட்டம்
சென்னை:
ஈழவேந்தன் நாடு கடத்தப்பட்டதைக் கண்டித்து வருகின்ற 15-ம் தேதி சென்னையில் பழ.நெடுமாறன் ஆர்பாட்டம்நடத்துகிறார்.
தமிழீழ விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளராக இருந்தவர் ஈழவேந்தன். இலங்கைத் தமிழரான அவர்தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்து வசித்து வந்தார்.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் அவர் இருந்தார். சமீபத்தில் திடீரென அவர்இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.
வயதான நிலையில் இருந்த ஈழவேந்தனை வலுக்கட்டாயமாக இலங்கைக்கு திருப்பி அனுப்பியதற்கு பல்வேறுதமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. தமிழ் சான்றோர் பேரவை கண்டன கூட்டம் நடத்தியது.
தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளரான பழ.நெடுமாறன் ஆர்ப்பாட்டம்நடத்தப் போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கைவருமாறு:
கடந்த இருபது ஆண்டு காலத்திற்கும் மேலாக தமிழ்நாட்டில் அகதியாக தஞ்சம் புகுந்து வாழ்ந்து வந்த தமிழீழவிடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ஈழவேந்தன் திடீர் என இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டிருப்பதுதமிழர்களை வேதனைக்கு உள்ளாக்கியிருக்கிறது.
ஒரு நாட்டில் அரசியல் அடைக்கலம் புகுந்து இருப்பவரை அவரது உயிருக்கு ஆபத்து நேரிடலாம் என்று அஞ்சும்நாட்டுக்கு அனுப்பக் கூடாது என்று ஜெனீவா உடன்பாடு கூறுகிறது. அதற்கு முரணாக அவரை இந்திய அரசு நாடுகடத்தியிருப்பது இரக்கமற்ற கொடுமையான செயலாகும்.
ஈழவேந்தன் நாடு கடத்தப்பட்டதற்குத் தமிழர்களின் கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் டிசம்பர் 15-ம் தேதிகாலை 11 மணிக்கு குடி நுழைவு அலுவலகம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள சாஸ்திரிபவணுக்கு முன்னால் ஆர்பாட்டம் நடத்தப்படும்.
தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவில் அங்கம் வகிக்கும் அத்தனை அமைப்புகளும் மற்றுள்ளதமிழ் அமைப்புகளும் இதில் கலந்து கொண்டு தங்கள் கண்டனத்தை தெரிவிக்க திரண்டு வருமாறு வேண்டுகிறேன்.இவ்வாறு தனது அறிக்கையில் நெடுமாறன் குறிப்பிட்டுள்ளார்.
-
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications