அரசு பஸ் டெப்போ மீது பெட்ரோல் குண்டு வீச்சு

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோவையில் அரசு போக்குவரத்துக் கழக பஸ் டெப்போவில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. மற்றும் சரமாரிக்கல்வீச்சும் நடந்தது. இதில் ஒரு பஸ் டிரைவர் காயமடைந்தார்.

கோவை, உக்கடம் பகுதியில் அரசு போக்குவரத்துக் கழகத்திற்குச் சொந்தமான பஸ் டெப்போ உள்ளது. இந்த டெப்போவில்,நள்ளிரவில் பஸ்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது திடீரென அங்கு இரண்டு பெட்ரோல் குண்டுகள் வந்து விழுந்தன. இவை இரண்டு வெடித்ததில் தீ பரவியது. அதனைஅங்கிருந்த ஊழியர்கள் உடனடியாக அணைத்தனர். மேலும், ஒரு பெட்ரோல் குண்டு ஒரு பஸ்சின் மீது விழுந்தது.

இதனைக் கவனித்த மதுக்கரை மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த ராஜமணிக்கம் (35) என்ற டிரைவர் அந்த பெட்ரோல் குண்டைஅகற்ற முயன்றார். இதில் அவர் காயம் அடைந்தார். இவர் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்த பெட்ரோல் குண்டு வீச்சைத் தொடர்ந்து கல்வீச்சும் நடந்தது. இந்த கல்வீச்சு குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குவிரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் சந்தானம் ஆகியோர் டெப்போவிற்குச் சென்று சம்பவ இடத்தைப்பார்வையிட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+