பாண்டிச்சேரி அரசை கலைக்கச் சொல்கிறார் ராமதாஸ்
பாண்டிச்சேரி:
அமைச்சர் பதவியில் இருந்து கண்ணனை நீக்கி, அதிகார துஷ்பிரயோகம் செய்த புதுச்சேரி அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று பா.ம.க. நிறுவுனர் டாக்டர்ராமதாஸ் வற்புறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புதுவையில் இயங்கும் காங்கிரஸ் அரசு நியாயமான குற்றச்சாட்டுக்களை கூட பொறுக்காமல் ஒவ்வொரு எம்.எல்.ஏவையும் வீட்டுக்கு அனுப்பும்போக்கு கண்டிக்கத்தக்கது. கண்ணன் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையா இல்லையா என்பதை தீர விசாரிக்காமல் அவர் மீது காழ்புணர்ச்சியோடுஎடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை பாட்டாளி மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள ஒரு அமைச்சரை பதவியில் நீடிக்க விட்டுவிட்டு, குற்றம்சாட்டிய அமைச்சரை பதவியை விட்டு நீக்கியுள்ளது. இதுசண்முகத்தின் அதிகார துஷ்பிரயோகத்தைக்காட்டுகிறது.
பல தடவை காங்கிரஸ் மற்றும் சண்முகத்தின் வஞ்சகத்தால் பாதிக்கப்பட்ட கண்ணன் இப்பொழுதாவது சண்முகத்தைப் புரிந்து கொண்டு இருப்பார் என்றுநினைக்கிறேன். கண்ணனை நீக்கிய பிறகு சண்முகம் அரசு நீடிக்க எந்தவித தார்மீக உரிமையும் இல்லை.
சண்முகம் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்து விட்டு சட்டசபை தேர்தலுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். இல்லையென்றால் கவர்னர் இந்தவிஷயத்தில் தலையிட்டு ஜனநாயக விரோத அரசை டிஸ்மிஸ் செய்ய ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யவேண்டும்.
இல்லையெனில் ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை பொய்த்து விடும். இந்த அரசு கலைக்கப்படவில்லை என்றால் விஷயத்தைஜனாதிபதிக்கு எடுத்துச் சொல்லவும் பா.ம.க. தயங்காது.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications