அசாமில் 11 பேர் சுட்டுக்கொலை
கவுஹாத்தி:
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் தீவிரவாதிகள், வியாழக்கிழமை 11 பேரைக் சுட்டுக் கொன்றனர்.
இதுகுறித்து கூடுதல் டிஜிபி ஸ்ரீவத்சவா கூறுகையில், தலைநகர் கவுஹாத்தியிலிருந்து 180 கிலோமீட்டர் தொலைவில்உள்ளது பார்பெட்டா மாவட்டம். இங்குள்ள சோல்மோரா கிராமத்தில், பூடோ விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள்கூட்டம் நடத்திக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த பூடோ தேசிய ஜனநாயக முன்னணி தீவிரவாதிகள், பூடோ தீவிரவாதிகளை நோக்கிசராமரியாகத் துப்பாக்கியால் சுட்டனர். இச்சம்பவத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
இந்த இரு தீவிரவாதிகளும் தனி மாநிலம் கேட்டுப் போராடி வருகின்றனர். ஆனால் இந்த வருடத் தொடக்கத்தில்பூடோ விடுதலைப் புலிகள், மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி சண்டை நிறுத்தத்தை மேற்கொண்டனர். இதைஎதிர்த்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கடந்த வாரம் அசாமில் வாழும் ஹிந்தி பேசும் வியாபாரிகளைக் குறி வைத்து உல்பா தீவிரவாதிகள் தாக்குதல்நடத்தினர். இந்தத் தாக்குதலுக்குப் பயந்து அங்கு வாழும் பிகார் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த மக்கள்தங்கள் சொந்த ஊர்களுக்கு இடம் பெயர்ந்தனர். இந்தத் தாக்குதலில் உல்பா தீவிரவாதிகள் ஈடுபட்டனர்.
கடந்த ஆறு வாரங்களில் நடந்த தாக்குதலில் 120 க்கும் மேற்பட்ட ஹிந்தி மொழி பேசும் மக்கள் கொல்லப்பட்டனர்என்பது நினைவிருக்கலாம்.
போலீஸ் ஆலோசனை: வன்முறை சம்பவம் தொடர்ந்து நடந்து வருவதையடுத்து ராணுவ வீரர்கள், புறக்காவல்படையினர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கவுஹாத்தியில் ஆலோசனை நடத்தினர்.
ஆலோசனைக் கூட்டத்தில் தொடர்ந்து நடந்து வரும் தாக்குதலைச் சமாளிப்பது மற்றும் வன்முறையைஉடனடியாகத் தடுத்து நிறுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
முன்னதாக, ராணுவ கமாண்டர் ஒருவர் கூறுகையில், நகர் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அசாம் மாநிலத்தின் சர்வதேச எல்லைப் பகுதிகளான பூடான், வங்கதேசத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுஎன்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications