தென்காசி கோழிப்பண்ணையில் வெடிகுண்டு வீச்சு
திருநெல்வேலி:
திருநெல்வேலியில், மசூதியில் குண்டு வீசி ஒருவர் கொலை செய்யப்பட்டசம்பவத்தையடுத்து தென்காசியில் கோழிப்பண்ணை மீது குண்டு வீசி தாக்குதல்நடத்தப்பட்டுள்ளது.
திருநெல்வேலிக்கு அருகே இருக்கும் பாளையங்கோட்டையில் உள்ள மசூதியில்வன்முறை கும்பல் புகுந்து ரஷீத் என்பவரை கொன்றது. குண்டு வீசி தாக்குதலும்நடத்தப்பட்டது. இதையடுத்து அங்கு வன்முறை சம்பவங்கள் நடந்தன.
இந்நிலையில் கொலை செய்யப்பட்ட ரஷீத்தின் சொந்த ஊரான கீழப்புலியூரில் அப்துல்ஜப்பார் என்பவரது கோழிப்பண்ணையில் திங்கள்கிழமை நள்ளிரவில் அடையாளம்தெரியாத சிலரால் பெட்ரோல் குண்டு விசி தாக்கப்பட்டது.
இந்த குண்டுவீச்சில் கோழிப்பண்ணை தீப்பற்றிக் கொண்டது. பண்ணைக்குள் இருந்தஅப்துல் ஜப்பாரின் தம்பி ஜின்னாவும், கோழிப்பண்ணை காவலாளர் குலாம் முகம்மதுஆகிய இருவரும் குண்டு வீசியவர்களை துரத்திச் சென்றனர். ஆனால் அவர்கள் தப்பிச்சென்று விட்டனர்.
தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீ விபத்தினால் பெரும்பாதிப்பு எதுவும் ஏறப்படவில்லை. இந்த சம்பவத்தை கண்டித்து தமிழக முஸ்லீம்முன்னேற்றக் கழகத்தினர் செவ்வாயகிழமை காலை சாலை மறியல் போரட்டத்தில்ஈடுபட்டனர்.
போராட்டம் செய்தவர்களிடம் தென்காசி டி.எஸ்.பி. மயில்சாமி, இன்ஸ்பெக்டர்கள்பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். கோழிப்பண்ணையில் தாக்குதல்நடத்தியவர்களை கண்டுபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பாளையங்கோட்டை மசூதியில் கொலை செய்யப்பட்ட ரஷீத்தை கொன்றவர்களைஉடனடியாக கைது செய்யக் கோரி போராட்டம் நடத்துவது பற்றி புதன்கிழமைநடக்கவிருக்கும் தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழக ஆலோசனை கூட்டத்தில் முடிவுசெய்யப்படவிருக்கிறது.
இந்த கூட்டத்திற்கு பிறகு மாநிலம் முழுவதும் தமிழக அரசை கண்டித்து போராட்டம்நடத்தப்படும். தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் நெல்லை மாவட்ட தலைவர்இஸ்மாயில் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் போடப்பட்டிருந்த காவல் குறைக்கப்பட்டுள்ளது. ஆனாலும்முக்கியமான பகுதிகளில் காவல் தொடருகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications