கோவை டாக்டர் ஸ்டிரைக் முடிவுக்கு வந்தது
கோவை:
கோவையில் பயிற்சி டாக்டரைத் தாக்கிய முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் காங்கிரஸ் பிரமுகரை போலீசார் கைதுசெய்தனர். இதையடுத்து திடீர் டாக்டர்கள் ஸ்டிரைக் வாபசானது
கோவை அரசு மருத்துவமனையில் பயிற்சி டாக்டர் ஒருவரைத் தாக்கியது தொடர்பாக முன்னாள்அ.தி.மு.க.,எம்.எல்.ஏ.,செல்வராஜை கைது செய்யக் கோரி டாக்டர்கள் திடீர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.இதையடுத்து மாவட்ட கலெக்டர் சந்தானம் டாக்டர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ.,செல்வராஜ், நீதிமன்றத்தில் சரணடைய காரில் வந்து கொண்டிருப்பதாகப்போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் அவரது காரை மடக்கிப் பிடித்து செல்வராஜைபோலீசார் கைது செய்தனர்.
மேலும், சம்பவத்தின் போது உடனிருந்த காங்கிரஸ் பிரமுகர் ராஜா தங்கவேலு என்பவரையும் போலீசார் கைதுசெய்தனர். இருவரும் கைது செய்யப்பட்டதையடுத்து டாக்டர்கள் ஸ்டிரைக்கை வாபஸ் பெற்றனர்.
கோவை அரசு மருத்துவமனை டாக்டர்களுக்கு ஆதரவு தெரிவித்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனையிலும்டாக்டர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இருவர் கைது செய்யப்பட்டதை அறிந்த அவர்களும் ஸ்டிரைக்கை கைவிட்டு விட்டு பணிக்குத் திரும்பினர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications