ஈழவேந்தன் நாடு கடத்தல்: தடையை மீறி ஊர்வலம்
சென்னை:
ஈழவேந்தன் நாடு கடத்தலைக் கண்டித்து 15-ம் தேதி தடையை மீறி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவரும்,தமிழீழ விடுதலை ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளருமான பழ.நெடுமாறன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஈழத்தமிழர் தலைவர் ஈழவேந்தன் நாடு கடத்தப்பட்டதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் டிசம்பர் 15-ம் தேதி சென்னையில் நாங்கள் நடத்தவிருந்தஆர்பாட்டத்திற்குத் தடை விதிக்கப்பட்டிருப்பது ஜனநாயக உரிமைகளைப் பறிப்பாதாகும்.
பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஈழவேந்தன் நாடு கடத்தப்பட்டுள்ளார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அவர் வெளியேற வேண்டும் எனசென்னையில் உள்ள முதன்மை குடியேற்ற அலுவலரான அஷிஸ் பெங்கரே என்பவர் முன்னறிவிப்பினைக் கொடுத்த பொழுது மத்திய உள்துறைஅமைச்சரகம் தலையிட்டு அதை நிறுத்தி வைத்தது.
மேற்கண்ட அதிகாரி தமிழர் விரோதப் போக்குடையவர், அலுவல் நிமித்தம் அவரைச் சந்திக்கும் ஈழத் தமிழர்களிடம் தேவையில்லாமல் கடுமையாகநடந்து கொள்பவர். தகாத வார்த்தைகளைப் பேசுவார்.
அதிகாலை ஐந்து மணிக்கு ஈழவேந்தனை எழுப்பி காரணம் எதுவும் கூறாமலும் மாற்றுடை எடுக்கக் கூட அனுமதிக்காமலும் இரகசியமாகவிமான நிலையத்திற்கு அழைத்துச் சென்று நாடு கடத்தியுள்ளார். ஈழவேந்தனுக்கு எத்தகைய ஆவணமும் தரப்படவில்லை. இது அப்பட்டமான சட்டமீறல்மட்டுமல்ல மனித உரிமை மீறலுமாகும்.
1986-ம் வருடம் ஈழத் தலைவர்கள் பாலசிங்கம், சத்தியேந்திரா, சந்திரஹாசன் ஆகியோரை இந்திய அரசு நாடு கடத்தியபோது கலைஞர் கருணாநிதிதலைமையில் டெசோ அமைப்பு சென்னையில் மாபெரும் கண்டன ஊர்வலம் நடத்தியது. அதற்குப்பின் மத்திய அரசு பணிந்தது. மூவரும் திரும்பவும் இந்தியா வரஅனுமதிக்கப்பட்டார்கள் என்பதை நினைவுபடுத்துகிறேன்.
எனவே காவல்துறையின் நியாமற்ற தடையை மீறி டிசம்பர் 15-ம் தேதியன்று காலை 11 மணிக்கு நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில் உள்ளசாஸ்திரிபவனுக்கு முன்னால் கண்டன ஆர்ப்பாட்டம் திட்டமிட்டபடி நடத்தப்படும்.
தமிழர்கள் திரளாகக் கலந்து கொள்ளும் படி வேண்டுகிறேன். அமைதியையும் கட்டுப்பாட்டையும் காக்கும் படி அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன்என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார் நெடுமாறன்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications