விஷ ஆறாக மாறி வரும் பாலாறு
சென்னை:
தோல் பதனீட்டுத் தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் கழிவுப் பொருட்கள் கலப்பதால் விஷத் தன்மை பெற்றுவருகிறது, ஒரு காலத்தில் வளமான ஆறாக கருதப்பட்ட பாலாறு.
காவிரி, தென் பெண்ணை பாலாறு - தமிழ்
கண்டதோர் வையை பொருணை நதி ..... என பாரதி பாடிய ஆறுகளில் ஒன்றுதான் பாலாறு. வேலூர் மாவட்டத்தில்ஓடும் வளமான நதி.
இப்போது பாலாறு, விஷ ஆறாகி விட்டது. தன்னைச் சுற்றிலும் உள்ள நிலங்களை மட்டு மல்லாது, பலநிலங்களையும் வளங் கொழிக்கும் பூமியாக மாற்றிய பெருமை கொண்டது பாலாறு. ஆனால் இன்று ..?
வேலூர் மாவட்டத்தில் உள்ள பல தோல் பதனீட்டுத் தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுப் பொருட்கள்,பாலாற்றில் கலக்கின்றன. இதனால் அதன் வளம் குறைந்து, நச்சுத் தன்மை அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக பாலாற்று தண்ணீரை விவசாய நிலங்களுக்குப் பயன்படுத்த முடியவில்லை. ஆயிரக்கணக்கானஹெக்டேர், பாசன நிலங்கள் பாலாற்று நீரை நம்பியே இருப்பதால், அந்த நிலங்கள் அனைத்தும் இப்போதுவறண்டு தரிசாக கிடக்கின்றன.
பாசனம் தவிர, குடிநீருக்கும் பாலாறே கை கொடுத்து வந்தது. அதுவும் இப்போது பாதிக்கப்பட்டுள்ளது. பாலாறு,வளம் குறைந்து விஷமாகியுள்ளது குறித்து கவலை தெரிவித்துள்ளார் பசுமைத் தாயகம் என்ற சுற்றுச்சூழல்அமைப்பின் தலைவர் டாக்டர் அன்புமணி. இவர், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மகன்என்பது நினைவிருக்கலாம்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அன்புமணி பேசுகையில், தோல் பதனீட்டுத் தொழிற்சாலைக் கழிவுகளால், நீர்மட்டுமன்று, நிலத்தடி நீரும், ஆற்றங்கரையோரம் உள்ள நீர் நிலைகளும் கூட மாசடைந்துள்ளன.
தோல் தொழிற்சாலைகள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து சுப்ரீம் கோர்ட் கடுமையான உத்தரவுபிறப்பித்தும் கூட அவை முறையாகக் கடைப்பிடிக்கப்படவில்லை. மாறாக, அவை மீறப்பட்டு வருகின்றன.
தோல் பதனீட்டுத் தொழிற்சாலை உரிமையாளர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையேரகசிய உறவு உள்ளது. இதில் எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி என்ற பாகுபாடு இல்லை.
பத்திரிகைகளும் இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துவதில்லை என்றார் அவர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications