கன்னடர்-தமிழர் ஒற்றுமைக்கு வித்திட்ட ஜே.எச். படேல்
பெங்களூர்:
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்த நேரம். பங்காரப்பா தான் முதல்வர்.
காவிரிப் பிரச்சனை தொடர்பாக தமிழகத்தில் முதல்வராக இருந்த ஜெயலலிதாவும் பங்காரப்பாவும் ஒருவருக்கு ஒருவர் வீர வசனஅறிக்கை போட்டி நடத்தினர். கர்நாடகத்தில் வெடித்தது கலவரம். கலவரம் தீவிரமாகி மைசூரிலும், பெங்களூரிலும்,மண்டியாவிலும் தமிழர்கள் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டனர். அந்த ரணத்தை இப்போதும் கூட கர்நாடக தமிழர்கள்மறக்கவில்லை.
இந்த ரண வேதனைக்குப் பின் நடந்த தேர்தலில் காங்கிரஸ் மண்ணைக் கவ்வியது. ஜனதா தளம் (அப்போது ஒன்றுபட்டிருந்தது)ஆட்சிக்கு வந்தது. தேவே கவுடா முதல்வரானார். அதிர்ஷ்டம் அவரை பிரதமராக்க, துணை முதல்வராக இருந்த ஜே.எச். படேல்முதல்வரானார்.
அப்போதும் கூட தமிழர்-கன்னடர் பிரச்சனை தொடர்ந்து கொண்டு தான் இருந்தது. இந்த பகைமையை கிட்டத்தட்டமுழுவதுமாகவே அப்புறப்படுத்திக் காட்டியவர் படேல்.
எந்தக் காரணத்துக்காகவும் அவர் காவிரிப் பிரச்சனையை அரசியலாக்கியது இல்லை. பிரச்சனையை தூண்டிவிட்டால் அரசியல்ஆதாயம் கிடைக்கும் என்றாலும் அந்த அரசியல் பாவச் செயலில் மட்டும் படேல் இறங்கியதேயில்லை.
மொழி விவகாரம், காவிரி விவகாரம் உள்பட பிரச்சனையை ஏற்படுத்தும் எந்த விஷயத்தையும் அவர் தூண்டிவிட்டது இல்லை.அரசியல்ரீதியில் அவர் நெருக்குதலுக்கு உள்ளானபோதும் கூட அதை வேறுவிதமாகத் தான் கையாண்டாரே தவிர, இருபிரிவினரை மோதவிட்டு லாபம் தேடியதில்லை. ஜென்டில்மேன் பாலிடிக்ஸ் தான் படேலின் ஸ்டைல்.
எதையுமே பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாதவர். எளிமையானவர். கட்சிக்குள் அவருக்கு தேவே கவுடாவின் மகன்களும்துணை முதல்வர் சித்தராமையாவும் பெரிய பெரிய பிரச்சனைகள் எல்லாம் கொடுத்தனர். ஆனால், அனைத்தையும் தூசி தட்டி தான்ஒரு கடுமையான அரசியல்வாதி தான் என்பதை பல முறை நிரூபித்திருக்கிறார் படேல்.
படலிேன் ஆட்சியில் தமிழர்-கன்னடர் பிரச்சனை எழுந்ததே இல்லை. திருவள்ளுவர் சிலை திறப்பு பிரச்சனையிலும் கூட யார்பக்கமும் சாயாமல் நடுநிலை வகித்தார். அதையும் தனது அரசியல் ஆதாயத்துக்கு அவர் பயன்படுத்தியதில்லை.
மூத்த அரசியல்வாதி, பொறுப்பு வாய்ந்த தலைவர் என்பதையும் பல இக்கட்டான நேரங்களில் நிரூபித்திருக்கிறார். காவிரிப்பிரச்சனையில் பல முறை தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். இதற்கு கர்நாடகத்தில் எதிர்க்கட்சிகள் கடும்எதிர்ப்பு தெரிவித்து வந்தபோதும், அதை அவர் கண்டு கொண்டதில்லை. பிரச்சனை தீருகிறதோ இல்யாைே அனைவரும்நட்புடன் வாழ வேண்டும் என விரும்பியவர்.
தானே முன்னோடியாக இருந்து முதல்வர் கருணாநிதியுடன் மிக நல்ல நட்பை பேணினார். கர்நாடகத்தில் வழக்கம்போல்கன்னடர்-தமிழர் நட்புறவு ஏற்பட கருணாநிதியுடன் இணைந்து பல நல்ல முயற்சிகளை எடுத்தவர் படேல்.
கன்னடத்திலும், ஆங்கிலத்திலும் மிக அழகாக உரையாற்றும் திறன் கொண்டவர். கர்நாடகத்தில் வசிக்கும் அனைவரும் கன்னடம்பேச வேண்டும் என விரும்பியவர். அதை பல முறை அவர் வெளிப்படையாகவே கூறியுள்ளார். ஆனால், அதைக் கூடநாசூக்காகத் தான் எடுத்துச் சொல்வார்.
சட்டசபையில் மிக காராசாரமான விவாதம் நடக்கும்போது கூட ஜோக் அடித்து எதிர்க் கட்சி எம்.எல்.ஏக்களை உட்காரவைத்துவிடுவார். எதிலும் எப்போதும் நகைச்சுவை தான் அவரது ஸ்டைல்.
சோஷலிசவாதியாக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர். வக்கீல், எம்.எல்.எ., எம்.பி., அமைச்சர், துணை முதல்வர்,முதல்வர் என படிப்படியாக அரசியலில் முன்னேறியவர். ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இடம் தராமல் ஆட்சி நடத்தினார்.
சொந்த லாபத்துக்காக என்று அவர் அரசியல் நடத்தியதே இல்லை. ஷிமோகா மாவட்டத்தில் உள்ள தனது தொகுதிக்கு அவர் எந்தமுக்கியத்தும் கொடுத்து கவனித்துக் கொண்டது இல்லை. இதனால், கடந்த தேர்தலில் தனது சொந்த ஊரிலேயேதோல்வியடைந்தார். இதையும் கூட அவர் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை. வெற்றி-தோல்வி, பதவி, அதிகாரம்எதுவுமே அவரது எளிய அணுகுமுறையை பாதித்து இல்லை.
படேலின் மறைவு கர்நாடகத்தில் வசிக்கும் அனைத்து மக்களுக்குமே மிகப் பெரிய இழப்பு தான்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications