"வீரப்பனை பிடிக்காமல் விடமாட்டோம்
கோவை:
வீரப்பனை எப்போது பிடிக்க முடியும் என்பதை இப்போதே கூற முடியாது. ஆனால், காவல் துறை மீது வைக்கப்படும் நம்பிக்கைக்கு நல்ல முடிவுகிடைக்கும் என கோவையில் டி.ஜி.பி., ராஜகோபாலன் தெரிவித்தார்.
காட்டு "நரி வீரப்பனைப் பிடிக்க போலீஸ் உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் கோவையில் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம்பேசிய டி.ஜி.பி. ராஜகோபலன் கூறியதாவது:
வீரப்பனைப் பிடிக்க ஆலோசனை நடத்தி வருகிறோம். இந்த ஆலோசனைக்குப் பிறகு கர்நாடக அதிரடிப்படை, தமிழ்நாடு அதிரடிப்படை, மற்றும் எல்லைப்பாதுகாப்பு படை ஆகியவற்றின் கூட்டுப் படைத் தலைவராக ஐ.ஜி., பாலச்சந்திரன் செயல்படுவார்.
நாங்கள் வகுத்துள்ள வியூகம் குறித்து எதுவும் சொல்ல இயலாது. இந்த தேடுதல் வேட்டையின்போது நல்ல முடிவு ஏற்படும் என்பதை மட்டும்உறுதியாகக் கூற முடியும்.
வீரப்பன் இலங்கைக்கு தப்பிச் சென்றிருக்கலாம் எனக் கூறப்படுவது எவ்விதத்திலும் சரியல்ல. அவ்வாறு தப்பிச் சென்றிருக்க வாய்ப்பு இல்லை. ஏனெனில்கடலோரக் காவல் படையின் காவல் பணி பலப்படுத்தப்பட்டுள்ளது.
எல்லைப் பாதுகாப்பு படை அதிரடிப்படையின் உதவிக்கு வந்துள்ளது. எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் தாமாக தனித்து இயங்க மாட்டார்கள்.அதிரடிப்படைதான் தேடுதல் வேட்டையில் தீவிரமாக ஈடுபடவுள்ளது.
அதிரடிப்படை மற்றும் எல்லைப் பாதுகாப்பு படையின் தலைமைப் பொறுப்பை ஐ.ஜி பாலச்சந்திரன் ஏற்றுள்ளார். உதவி கமாண்டராக கர்நாடகஅதிரடிப்படையின் தலைவர் டி. ஐ.ஜி., ஹர்ஷவர்த்தன ராஜூ செயல்படுவார்.
தற்போது திட்டமிடுதல், வியூகம் அமைத்தல், நுண்ணறிவு ஆகிய 3 முக்கிய கட்டங்களைக் கொண்டு வீரப்பனைத் தேடும் பணியில் ஈடுபடுகிறோம்.ஹெலிகாப்டரின் உதவியுடன் ரோந்து பணியை மேற்கொள்ள முடியும்.
கோவையில் பஸ் டெப்போ மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட 5 நிமிடத்திற்குள் சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று விட்டனர். குற்றவாளிகளைவிரைவில் பிடிப்போம். மாநிலத்தில் மற்றொரு இடத்தில் நடந்த சம்பவத்தின் எதிரொலியாக இது நடந்திருக்கலாம்.
கோவை எம். பி., ராதாகிருஷ்ணன் மீது 9 வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு குறித்து இப்போது எதுவும் தெரியாது. தவறு செய்பவர்கள்யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர். அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications