ஆயுத விற்பனையில் 3-வது இடத்தில் பிரான்ஸ்

Subscribe to Oneindia Tamil

பாரீஸ்:

உலக அளவில், ஆயுத விற்பனையில், பிரான்ஸ் மூன்றாவதுஇடம் வகிகிகறது என அந்நாடு தெரிவித்துள்ளளது.

உலக சந்தையில் அமெரிக்காவும், பிரிட்டனும் ஆயுதங்கள் ஏற்றுமதியில் முதல் இரண்டு இடங்களை பெற்றுள்ளன. இருநாடுகளும் உலக அளவில் 12 முதல் 15 சதவிகித ஆயுத ஏற்றுமதியை செய்து வருகிறார்கள்.

இது குறித்து பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சகம் புதன் கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,1999-ம் ஆண்டில் பெரியஒப்பந்தங்கள் அதிக அளவில் இல்லை. 30.5 பில்லியன் ப்ராங்குகள் (4.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) அளவுக்குஒப்புந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

1998-ம் ஆண்டு 50 பில்லியன் அளவுக்கும், 1997-ம் ஆண்டு 30.2 பில்லியன் அளவுக்குமே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.1998-ம் ஆண்டை பொறுத்த வரை, அந்த ஆண்டு விற்பனையில் 60 சதவிகித விற்பனை ஐக்கிய அரபு குடியரசு வாங்கியபோர்விமானம் மூலம் நடந்தது.

1999-ம் ஆண்டு அதிக அளவு ஆயுதம் வாங்கிய நாடுகளில் தென் ஆப்பிரிக்கா ( கடற்படைக்கு தேவையான ஆயுதங்கள்), கீரீஸ் (விமான எதிர்ப்பு ஏவகணைகள், மின்னணு சாதனங்கள்), சுவிட்சர்லாந்து

(ஹெலிகாப்டர் மற்றும் வேறு பல சாதனங்கள்), தென் கொரியா நீண்ட கால தொழிற்சாலை ஒப்பந்தத்தின் பேரில் வாங்கியபொருட்களும் அடங்கும்.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, ஜெர்மனி ஆகிய 5 நாடுகள் தான் உலகிலேயே அதிக அளவில் ஆயுதம் ஏற்றுமதிசெய்யும் நாடுகளாகும். இவர்கள் அனைவரும் சேர்ந்து உலக சந்தையில் 90 சதவிகித ஆயுத ஏற்றுமதியை செய்து வருகிறார்கள்என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+