காதலிக்கு தெருவில் தாலி கட்டியவர் கைது
சென்னை:
சென்னை பெரம்பூரில் நடுத்தெருவில் தனது காதலிக்குத் தாலி கட்டிய காதலனை போலீஸார் புதன்கிழமை கைதுசெய்தனர்.
சென்னைப் பெரம்பூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் ராஜலட்சுமி என்ற ராஜி (23). இதே பகுதியைச்சேர்ந்தவர் முனுசாமி. அவரது மகன் பழனி (23).
ராஜியும், பழனியும் கடந்த சில மாதங்களாகக் காதலித்து வந்தனர். விஷயம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது.இதனால் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து ராஜியை மணமுடித்தே தீருவது என்று சபதம் போட்டார் பழனி. பின்னர் புதன்கிழமை தனதுநண்பர்கள் நிக்சன், இதயமணி, செபாஸ்டியான் ஆகியோருடன் ராஜி வீட்டுக்கு வந்தார் பழனி.
பின்னர் ராஜி என்று அழைத்துள்ளார். சத்தம் கேட்டு வெளியே வந்தார் ராஜி. உடனே பழனி, நடுத்தெருவில்வைத்து ராஜிக்குத் தாலி கட்டினார்.
இதை எதிர்பாராத ராஜி கூச்சல் போட்டுக் கத்தினார். உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் இந்த நால்வர்கும்பலை துரத்தினர். ஆனால் அவர்கள் தலைமறைவாகி விட்டனர்.
இதையடுத்து ராஜி தனது தந்தையுடன் சென்று சென்னை திரு.வி.க.நகர் போலீஸில் புகார் செய்தார். புகாரின்அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஈவ் டீசிங் வழக்கில் பழனி உள்பட 4 பேரையும் கைதுசெய்தனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications