ரூ. 13 லட்சம் மோசடி .. சென்னை நபர் கைது

Subscribe to Oneindia Tamil

கோவை:

கடன் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 13 லட்ச ரூபாயை மோசடி செய்த சென்னையைச் சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர் கோவையில் சுற்றுப் பயணம் செய்து பல தொழிலதிபர்களுடன்தொடர்பு கொண்டார். தொழிலதிபர்களின் கடன் தேவையை அறிந்து கொண்டு அதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தத்தொடங்கினார்.

கோவை மாவட்டம், அவிநாசியைச் சேர்ந்த தொழிலதிபர் நாச்சிமுத்து என்பவருக்கு ஒரு கோடி ரூபாய் கடன் பெற்றுத் தருவாதகக்கூறியுள்ளார். இதனை நம்பிய நாச்சிமுத்துவிடம், லோகநாதன், முன்வட்டி, பத்திர செலவு என ரூ. 10 லட்சம் வரை பணத்தைப்பெற்றுக் கொண்டு தலைமறைவாகி விட்டார்.

இதே போன்று கோவையைச் சேர்ந்த இருவரிடமும் ரூ. 3 லட்சத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார். இது குறித்து போலீசில் நாச்சிமுத்துபுகார் தெரிவித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மோசடியில் ஈடுபட்டதாக லோகநாதனை சென்னையில் கைதுசெய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+