நலமடைகிறார் காளிமுத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிமுக அவைத் தலைவர் காளிமுத்துவின் உடல்நிலையில் நல்லமுன்னேற்றம் காணப்படுவதாக அப்பல்லோ டாக்டர்கள் தெரிவித்தனர்.

அதிமுக அவைத்தலைவர் காளிமுத்துவுக்கு கடந்த திங்கள்கிழமை நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. பின்னர் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

இதற்கிடையே செவ்வாய்க்கிழமை இரவு அவருக்கு அடிவயிற்றில் ரத்தக் கசிவு ஏற்பட்டது. இருதயத்தில் உள்ள இடது வென்ட்டிரிக்கிள்செயலிழந்தது. இதையடுத்து கைதேர்ந்த டாக்டர்கள் குழு அவருக்குத் தீவிர சிகிச்சையளித்தது.

48 மணி நேர கண்காணிப்புக்குப் பிறகு அவரது உடல்நிலை குறித்து தெரிவிக்கப்படும் என்று அவருக்குச் சிகிச்சையளித்த டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் புதன்கிழமை அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்குத் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்படும் என்றும்டாக்டர்கள் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+