எலி வால் போய் பல்லி வந்தது ..
திருவனந்தபுரம்:
சபரிமலையில் வழங்கப்படும் அரவணை பாயாசத்தில் எலி வால் கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டு அது குறித்தான பரபரப்பு ஓய்ந்துள்ள நிலையில் மீண்டும் ஒருபரபரப்பு ஏற்பட்டுள்ளது. இப்போதைய குழப்பத்திற்குக் காரணம், பல்லி.
திருவனந்தபுரத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கொடுகானூரில் வசித்து வரும் சசீதரன் சபரிமலை பிரசாதத்தில் இந்த பல்லி இருந்ததைக்கண்டுபிடித்தார்.
இதுகுறித்து சசீதரனின் மருமகன் சுரேஷ் கூறுகையில், டிசம்பர் மாதம் 7 ம் தேதி எனது மாமனார் சபரிமலைக்குச் சென்றார். அவர் திரும்பி வரும் போதுமூன்று டப்பாக்களில் அங்கு வழங்கப்படும் அரவணைப் பாயாசத்தை வாங்கி வந்தார்.
அந்த மூன்று டப்பாக்களில் இரண்டை நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கொடுத்து விட்டோம். மூன்றாவது டப்பாவை நாங்கள் வைத்திருந்தோம்.நான் இந்த டப்பாவைத் திறந்து எனது மாமனார், மனைவி, எனது ஒரு வயது குழந்தை ஆகியோருக்குக் கொடுத்துவிட்டு நானும் சாப்பிட்டேன்.
பின்னர் இன்னும் கொஞ்சம் சாப்பிடலாமே என்று எடுத்த போது, அதில் பல்லி இருந்ததைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தேன். அரவணைப் பாயாசத்தில்பல்லி மேலிருந்து கீழான நிலையில் கிடந்தது. அதன் வால் அங்கு இல்லை.
உடனடியாக வட்டியூர்காவு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தோம். பின்னர் சுகாதாரத்துறையினர் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்குத் தகவல்கொடுத்தோம்.
எங்கள் வீட்டில் பாயாசத்தைச் சாப்பிட்ட அனைவரும் டாக்டரிடம் சென்று பரிசோதனை செய்தோம். எனது மனைவி மட்டும் தோலில் அரிப்புஏற்படுவதாகக் கூறினார். அந்த பாயாசத்தை சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.
இது குறித்து திருவாங்கூர் தேவஸம் போர்டு அதிகாரிகள் 3 பேர்களிடமும் கூறப்பட்டுள்ளது. இது குறித்து அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்றார்சுரேஷ்.
வட்டியூர்காவு போலீஸார் கூறுகையில், சபரிமலைப் பிரசாதத்தில் பல்லி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது உண்மையே. இது குறித்தான பிற விவரங்கள்எதுவும் தெரியவில்லை என்றனர்.
ஏற்கனவே சபரிமலைப் பிரசாதத்தில் எலி வால், பீடித் துண்டுகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. தற்போது இது குறித்து கேரள போலீஸார் விசாரணைநடத்தி வருகிறார்கள்.
1999 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை திருவாங்கூர் தேவஸம் போர்டு சார்பிலேயே சபரிமலைப் பிரசாதம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது பிரசாதம்வழங்கும் பொறுப்பு, பஞ்சமி பேக்ஸ் என்ற தனியார் நிறுவனத்திடம் கான்டிராக்ட் முறையில் கொடுக்கப்பட்டுள்ளது. ரூ 27.5 மில்லியன் அளவுக்கு இந்தகாண்டிராக்ட் விடப்பட்டுள்ளது.
நவீன முறையில் பேக்கிங் செய்து பிரசாதங்களை இந்த நிறுவனம் பக்தர்களுக்கு வழங்கி வருகிறது. இப்போது, எலிவால், பல்லி என குழப்பம்எழுந்துள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications