For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செங்கோட்டையனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அண்ணா போக்குவரத்துக் கழகத்திற்கு பஸ் உதிரி பாகங்கள் வாங்கியதில் ரூ 75.42 லட்சம் ஊழல் புரிந்தது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர்செங்கோட்டையனுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ 20,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை தனி நீதிமன்றத்தில் இவ்வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்ததும், வழக்கை விசாரித்த நீதிபதி தார்வேஸ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும், அவரது உதவியாளர் எழிலுக்கும் 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ 20,000அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.

ஏஜென்டுக்கு 8 ஆண்டு:

ஊழலுக்கு உடந்தையாக இருந்தது தொடர்பாக கோபிச் செட்டிப் பாளையத்தைச் சேர்ந்த ஏஜன்ட் நடராஜனுக்கு 8 வருட கடுங்காவல் தண்டனையும், ரூ 18,000 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார் நீதிபதி தார்வேஸ்.

நீதிபதி தனது தீர்ப்பில் இந்த வழக்கு சந்தேகத்திற்கு இடமின்றி நிருபிக்கப்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

அண்ணா போக்குவரத்துக் கழகத்திற்குத் தேவையான உதிரிபாகங்கள், பஸ் கட்டுமானம், டிக்கெட் அச்சடித்தல் போன்றவற்றில் 75.42 லட்ச ரூபாய்ஊழல் புரிந்ததாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மீது வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் செங்கோட்டையனுக்கு உடந்தையாக இருந்த அவரது உதவியாளர் எழில், கோபி நடராஜன் ஆகியோர் மீது சிபிசிஐடி போலீஸார் வழக்குத்தொடர்ந்தனர்.

இவ்வழக்கு 2 வது தனி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்குத் தொடர்பாக கடந்த 97 ம் வருடம் ஜூலை மாதம் குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்யப்பட்டது.

1998 ம் வருடம், மார்ச் மாதம் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து அதே வருடம் டிசம்பர் மாதம் முதல் சாட்சிகள் மீதானவிசாரணை நடந்து வருகின்றது. அரசுத் தரப்பில் மொத்தம் 66 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.

செங்கோட்டையன் தரப்பில் 2 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இரு தரப்பு சாட்சிகளின் விசாரணை முடிந்தது. பின்னர் இவ்வழக்கில் வக்கீல்கள் விவாதமும்முடிவடைந்தது.

இருதரப்பு விவாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எஸ்.எஸ்.பி.தார்வேஸ் இவ்வழக்கு தொடர்பான தீர்ப்பை வியாழக்கிழமை வழங்குவதாகஅறிவித்திருந்தார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X