தென்மாவட்டங்களுக்குப் போகிறார் கருணாநிதி
சென்னை:
தமிழக முதல்வர் கருணாநிதி தென்மாவட்ட சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
முதல்வர் கருணாநிதி வியாழக்கிழமை முதல் டிசம்பர் மாதம் 31 ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவிருக்கிறார்.
அவை குறித்த விவரம் வருமாறு:
வியாழக்கிழமை காலை சென்னை விஜயஸ்ரீ திருமண மண்டபத்தில் நடக்கவுள்ள தமிழன்பன் இல்லத் திருமணவிழா. மாலை 6.30 மணிக்கு சென்னை ராயல் மெரிடியன் ஹோட்டலில் நடக்கும் நரம்பியல் துறையின் 49 ம்ஆண்டு மாநாடு.
15 ம் தேதி மாலை சென்னை இம்ப்பீரியல் ஹோட்டலில் நடக்கும் நிகழ்ச்சி. இதே நாள் மாலை 6 மணிக்கு சீரணிஅரங்கில் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் துவக்க விழா.
17 ம் தேதி காலை அறிவாலயத்தில் நடக்கும் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக கூட்டத்தில் பங்கேற்கிறார். மாலைவள்ளுவர் கோட்டத்தில் நடக்கும் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு பென்ஷன் துவக்க விழா. 19 ம் தேதிமாலை கல்வி அமைச்சர் அன்பழகனின் 79 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்.
20 ம் தேதி காலை அமைச்சரவைக் கூட்டம். மாலை கிண்டி ராஜ்பவனில் ரமலான் நோன்பு நிகழச்சி. 22 ம் தேதிமாலை சென்னை கலைஞர் அரங்கில் டையாபெடிக்ஸ் 2000 கண்காட்சி தொடக்கவிழா.
27 ம் தேதி மதுரை கணினித் தமிழ்ச்சங்கம் தொடக்கவிழா. மாலை 5 மணிக்கு மகளிர் சுய உதவிக் குழுக்கள்மாநாடு. 28 ம் தேதி காலை மதுரை திருவாதவூர் 100 வது சமத்துவபுர திறப்பு விழா.
அதற்குப்பின் காலை 10 மணிக்கு மதுரை தும்பைப்பட்டியில் கக்கன் மணிமண்டப திறப்பு விழா. 11.30 மணிக்குஉசிலம்பட்டி வல்லரசு நினைவிடத்தில் அஞ்சலி, மாலை 5 மணிக்கு தேனி மாவட்ட கலெக்டர் வளாகம் திறப்புவிழா.
29 ம் தேதி காலை 10.30 மணிக்கு கொடைக்கானல் அரசினர் விடுதி திறப்பு விழா. 30 ம் தேதி மாலை சென்னைமெரிடியன் ஹோட்டல் திறப்பு விழா. 31 ம் தேதி மாலை 5 மணிக்கு குமரி அனந்தன் பொதுவாழ்வுப் பொன்விழாஆகிய நிகழ்ச்சிகளில் முதல்வர் கலந்து கொள்கிறார்.












Click it and Unblock the Notifications