தாதாக்களுடன் தொடர்பு: இந்திப் படத் தயாரிப்பாளர் கைது
மும்பை:
தனது புதிய படத்திற்காக மாபியா கும்பலிடம் பணம் வாங்கிய இந்திப் படத் தயாரிப்பாளர் நஸீம் ரிஸ்வியை மும்பை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
இவர் சோரி சோரி சுப்கே சுப்கே என்ற புதிய படத்திற்காக மாபியா கும்பலிடமிருந்து பணம் வாங்கியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்துப் போலீஸார் கூறுகையில், சல்மான் கான், ப்ரீத்தி ஸிந்தா, ராணி முகர்ஜி உள்ளிட்ட பல நடிகர், நடிகையரிடம் தனக்கும், மும்பை மாபியாகும்பலுக்கும் உள்ள தொடர்பைப் பயன்படுத்தி அவர்களிடம் மொத்தமாக கால்ஷீட் வாங்கியுள்ளார் ரிஸ்வி. இதை நம்பி அவர்களும் கால்ஷீட்கொடுத்துள்ளனர்.
இரண்டே மாதங்களில் சோரி சோரி சுப்கே சுப்கே என்ற படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டார். இது தொடர்பாகக் கிடைத்த தகவலின் பேரில், மும்பைபோலீஸார், நஸீமின் வீட்டுக்குச் சென்று அவரைக் கைது செய்தனர். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
நஸீம் ரிஸ்வி தனது படத்திற்கு வைர வியாபாரி பரத் ஷா தான் பண முதலீடு செய்துள்ளார் என்று கூறியுள்ளார். இதனால் பரத் ஷா வின் சொத்துக்கள் குறித்துவிசாரணை நடத்தி வருகிறோம். மேலும் சோரி சோரி சுப்கே சுப்கே படம் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.
மும்பை நகர் உயர் போலீஸ் அதிகாரி மகேஷ் நரெய்ன் சிங் கூறுகையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாகவே, நஸீமுக்கும், மும்பை மாபியா கும்பலுக்கும்இடையே தொடர்பு இருப்பதாகத் தகவல்கள் கிடைத்தன. இதுகுறித்து நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள நஸீம் குறித்து, மும்பை இணைக் கமிஷனர் சிவானந்தன் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. மேலும்வருமானவரித்துறை அதிகாரிகள், போலீஸ் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications