அமெரிக்காவில் அதிகார மாற்றம் துவங்கியது

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:

அமெரிக்காவின் 43-வது அதிபராக ஜார்ஜ் புஷ் ஜூனியர் பதவியேற்பதற்கு வசதியாக அதிகார மாற்ற நிகழ்ச்சிகள்அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் தொடங்கி விட்டன.

ஜனநாயகக் கட்சி வேட்பாளர் அல் கோர் தனது தோல்வியை ஒப்புக் கொண்ட நிலையில், அடுத்த அதிபராக ஜார்ஜ்புஷ் ஜூனியர் பதவியேற்கவுள்ளார். இதையடுத்து அடுத்த அதிபர் ஆட்சிப் பொறுப்பில் அமருவதற்கு வசதியாகநிர்வாக ரீதியிலான மாற்றங்கள் தலைநகர் வாஷிங்டனில் தொடங்கியுள்ளன.

இதுதொடர்பாக அமைக்கப்பட்ட அலுவலகத்தில், தற்போதைய அதிபர் கிளிண்டன் நிர்வாகத்தைச் சேர்ந்தஅதிகாரிகள், முக்கிய தஸ்தாவேஜுகள் உள்ளிட்ட பலவற்றை ஒப்படைத்துள்ளனர். புதிய துணை அதிபராகபதவியேற்கவுள்ள டிக் செனியிடம் இவை ஒப்படைக்கப்பட்டன. மேலும் இதுதொடர்பான பணிகளுக்காக 5.3மில்லியன் டாலர் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

புதிய வெளியவுறவுத் துறை அமைச்சராக காலின் பாவல் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்,முன்னாள் பாதுகாப்புத் துறை தளபதியாக இருந்தவர். ஆப்பிரிக்க அமெரிக்கரான இவரது நியமனம்,முழுமையான அமைச்சரவைக்கு முன்பாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. வளைகுடாப் போரின்போதுஅதிகம் பேசப்பட்டவர் பாவல் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனவரி 20-ம் தேதி புஷ் அதிபராகப் பதவியேற்கிறார்.

புஷ்ஷுடன் 14 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்பர் என்று தெரிகிறது. அனைவரும் புதுமுகங்களாக இருப்பர்.அதேபோல, முந்தைய குடியரசுக் கட்சி ஆட்சிகளின்போது பதவி வகித்த பலருக்கும் பதவி அளிக்கப்படும் என்றும்எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச விவகாரம், பாதுகாப்பு தொடர்பான முக்கியத் துறைகளுக்கு புஷ் முக்கியத்துவம் கொடுத்து முக்கியநபர்களின் பொறுப்புகளை அறிவிப்பார் என்று தெரிகிறது. புஷ்ஷின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராககோண்டலசா ரைஸ் நியமிக்கப்படலாம்.

ரைஸும், ஆப்பிரிக்க அமெரிக்கர் ஆவார். முந்தைய குடியரசுக் கட்சி ஆட்சிகளின்போது முக்கியப் பொறுப்புகளைவகித்தவர். ரீகன் மற்றும் புஷ்ஷின் தந்தையான ஜார்ஜ் புஷ் ஆட்சிகளின்போது சோவியத் விவகாரகங்களுக்கானஆலோசகராக இருந்துள்ளார்.

அமெரிக்க அரசு நிர்வாக வரலாற்றில் முக்கியப் பொறுப்புகளை வகிக்கும் முதலாவது கருப்பர்கள் என்ற பெருமைபாவலுக்கும், ரைஸுக்கும் கிடைக்கவுள்ளது.

அதிபர் கிளிண்டன் மற்றும் துணை அதிபர் அல் கோருடன் ஆலோசனை நடத்திய பின் அமைச்சரவை சகாக்கள்குறித்து ஜார்ஜ் புஷ் ஜூனியர் முடிவெடுப்பார் என்று அரசு வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. தற்போது டெக்ஸாஸ்ஆளுநராக இருக்கும் புஷ், தலைநகர் ஆஸ்டினிலிருந்து ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனுக்குவருகிறார்.

பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்படுவதற்கு பலருடைய பெயர்கள் அடிபடுகின்றன. அவர்களில் சாம்நூன், பால் உல்போவிட்ஸ் ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்களில் பால் உல்போவிட்ஸ், ரீகன் மற்றும் ஜார்ஜ்புஷ் ஆட்சிக்காலத்தில் பதவி வகித்தவர்.

தனது அமைச்சரவையில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கு முக்கியப் பதவி கொடுக்கவும் புஷ்திட்டமிட்டுள்ளதாகத் கூறப்படுகிறது. தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்ட பல்வேறு குழப்பங்களால் பாதிக்கப்பட்டுள்ளஅமெரிக்க ஜனநாயகத்திற்கு மேலும் களங்கம் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு இந்த முடிவை புஷ்எடுத்திருப்பதாகத் தெரிகிறது.

நிர்வாக மாற்ற பணிகள் குறித்து டிக் செனி கூறுகையில், அமைச்சரவை மற்றும் அரசு அதிகாரிகள் குறித்த பட்டியல்தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மொத்தம் 7000 பணியிடங்களுக்கு ஆட்கள் நியமிக்கப்படவேண்டும். இவற்றில் 1000 பேருடைய நியமனத்திற்கு நாடாளுமன்ற காங்கிரஸ் ஒப்புதல் பெற வேண்டும்.இதுவரை 25 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளோம் என்றார்.

இதற்கிடையே, அடுத்த அதிபர் என்ற அந்தஸ்தில் தனது முதல் நாளை வியாழக்கிழமை, ஆஸ்டின் நகரில்செலவிட்டார் புஷ். அங்குள்ள சர்ச்சில் பிரார்த்தனைக் கூட்டம் மற்றும் இசை நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார்.பிரார்த்தனை மூலம் தனது அதிபர் வாழ்க்கையைத் துவங்க புஷ் விரும்பியதாக அவரது உதவியாளர் கரேன்ஹியூக்ஸ் தெரிவித்தார்.

தற்போதைய அதிபர் கிளிண்டன், வியாழக்கிழமை புஷ்ஷை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துதெரிவித்தார். கிளிண்டன் தற்போது ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் இருக்கிறார்.

இந்த நிலையில், நாட்டின் தேர்தல் முறையில் சீர்திருத்தம் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக புளோரிடா மாநிலகவர்னரும், ஜார்ஜ் புஷ் ஜூனியரின் தம்பியுமான ஜெப் புஷ் கூறியுள்ளார். புஷ் ஜூனியர் அதிபராவதற்குபுளோரிடா மாநில வாக்குகள்தான் கடைசி நிமிடத்தில் கை கொடுத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+