"ஊழலை ஒழிக்க அலிகளே சிறந்தவர்கள்
சேஹோர் (ம.பி):
அரசியலில் மலிந்து கிடக்கும் ஊழல்களை முழுவதுமாக ஒழிக்க தங்களைப் போன்ற அலிகளால் மட்டுமே முடியும் என்று மத்தியப் பிரதேச மாநிலம்சேஹோர் மாவட்டத்தைச் சேர்ந்த "அலி கவுன்சிலர் ராணி ஜான் பாயல் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்
.சேஹோர் மாவட்ட கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் ராணி பாயல். இவர் கூறுகையில், ஊழல் செய்யும் அரசியல்வாதிகள், அதிகாரிகள்எங்களைப் போன்ற அலிகளைக் கண்டு அதிக அளவு பயப்படுகிறார்கள். இதனால்தான் நாங்கள் தற்போது பொதுவாழ்க்கையில் நுழையத் தொடங்கிவிட்டோம். நானும், மக்கள் எதிர்பார்ப்பிற்குத் தகுந்தவாறு நடந்து கொள்வேன் என்றார்.
ராணி சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் அமெரிக்கன் வார்டு என்ற பிரபலமாகப் பேசப்படும் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
முதல்முதலாக இந்தியாவில் ஷப்னம் மவுசி என்ற அலி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அலிகளின் நலனிற்காகக் குரல்கொடுத்து வந்த அவர், தேசிய அளவில் அலிகள் தேர்தலில் நிற்பதற்காகவும் பல உதவிகளைச் செய்து வருகிறார்.
ராணிக்காகத் தேர்தல் பிரச்சாரம் செய்த ஷப்னம், அடுத்த லோக்சபா தேர்தலில் நாடு முழுவதும் அலிகள் தேர்தலில் போட்டியிடுவார்கள் என்றுதெரிவித்தார்.
பாரதிய ஜனதாக் கட்சியின் சேஹோர் மாவட்டத் துணைத்தலைவர் ஓம் பிரகாஷ் மிஸ்ரா கூறுகையில், அலிகள் அரசியலில் நுழைவது சமுதாய நலனுக்குநல்லதல்ல என்றார்.
யு.என்.ஐ.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications