எதிர்க்கட்சிகளின் அயோத்தி தீர்மானம்: நாடாளுமன்றத்தில் தோல்வி

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட 3 மத்திய மந்திரிகள்ராஜினாமா செய்ய வேண்டும் என பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானம் தோல்லிஅடைந்தது.

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் மத்திய மந்திரிகள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி,உமாபாரதி ஆகியோர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த 3 அமைச்சர்களும் ராஜினாமா செய்ய வேண்டும். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தேசிய உணர்வுஎன்று கூறிய பிரதமர் வாஜ்பாய் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

இதனால் ஏற்பட்ட அமளியினால் பாராளுமன்ற நடவடிக்கைகள் 7 நாட்கள் பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்துசபாநாயகர் பாலயோகி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி பேச்சு வார்த்தை நடத்தினார்.

அத்வானி உள்ளிட்ட 3 மத்திய மந்திரிகளை பதவி நீக்கம் செய்ய 184-வது பிரிவின் கீழ் தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும். இந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்பட்டு ஓட்டெடுப்பும் நடைபெற வேண்டும் என்றுஎதிர்க்கட்சிகள் நிபந்தனை விதித்தன.

இக் கோரிக்கையை சபாநாயகர் ஏற்றார். வாஜ்பாய் கூறிய கருத்துக்கும் அவரே விளக்கம் அளிப்பார் என முடிவுசெய்யப்பட்டதைத் தொடந்து பாராளுமன்ற நடவடிக்கைகள் புதன் கிழமை தொடங்கியது.

புதன்கிழமை கேள்வி நேரத்திற்கு பிறகு 3 மத்திய மந்திரிகளை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கண்டனதீர்மானத்தை எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்தனர்.

இதன் மீது சென்ற இரு நாட்களாக கடும் விவாதம் நடந்தது. அனைத்து கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டுபேசினர். இறுதியாக விவாதத்துக்கு பதிலளித்து வாஜ்பாய் வியாழக்கிழமை மாலை பேசினார்.

அதைத்தொடர்ந்து தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக 291வாக்குகளும், அரசுக்கு எதிராக 179 வாக்களும் கிடைத்ததால் எதிர்க்கட்சிகளின் தீர்மானம் தோல்வியடைந்ததது.

எதிர்க்கட்சிகளின் தீர்மானம் தோல்வியடைந்து விட்டதால் மத்திய மந்திரிகளை பதவி நீக்கம் செய்ய வேண்டும்என்ற கோரிக்கையை பாராளுமன்றம் நிராகரிக்கிறது என சபாநாயகர் அறிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+