அமைச்சர்களைப் புறக்கணிக்கிறார் .. சந்திரிகா மீது புகார்
கொழும்பு:
விடுதலைப்புலிகளுடன், இலங்கை அரசு விரைவில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்போவது குறித்து, இலங்கைஅமைச்சர்களுக்குத் தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை என்று மூத்த அமைச்சர் அனிருத்தா ரத்வத்தே குற்றம்சாட்டியுள்ளர்.
சமீபத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், இலங்கை அரசு மற்றும் விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தைநடத்தப்போவது குறித்து நாங்கள் பத்திரிக்கைகள் மற்றும் டி.வி., ரேடியோக்கள் மூலமே தெரிந்து கொண்டோம்.எங்கள் யாருக்குமே இதுகுறித்து அரசு தகவல் தெரிவிக்கவில்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமண்கதிர்காமரிடம் குறைபட்டுக் கொண்டார்.
அமைச்சர்களின் மன வருத்தம் குறித்து வெள்ளிக்கிழமை டெய்லி மிரர் என்ற பத்திரிக்கையில் வெளியாகியுள்ளசெய்தி:
இலங்கையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடப்பது குறித்து, பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமநாயகேவுக்குக் கூடத் தெரியாதுஎன்று அமைச்சர் அனிருத்தா ரத்வத்தே கூறியுள்ளார். ஆனால் இதை விக்ரமநாயகே மறுத்துள்ளார். அவர்கூறுகையில், விடுதலைப் புலிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவது தொடர்பான முடிவுகளை அதிபரும், பாதுகாப்புஅமைச்சரும்தான் எடுக்க வேண்டும். அவர்களது முடிவுகளை யாரும் கேள்வி கேட்க முடியாது என்றுகூறியதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டிருந்தது.
அமைச்சர் ரத்வத்தே கூறிய கருத்தை பெரும்பாலான அமைச்சர்கள் ஆதரித்துள்ளனர். விடுதலைப்புலிகளுடன்,இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்தவிருப்பது குறித்து சக அமைச்சர்களுக்குத் தெரிவித்திருக்க வேண்டும்என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதற்கிடையே, விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே எப்போது பேச்சுவார்த்தை துவங்கும்என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் கதிர்காமர்,இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்கிறது என்று அறிவித்தார். இதையடுத்து எப்போதுஅமைதிப் பேச்சு வார்த்தை ஆரம்பமாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
நவம்பர் 27 ம் தேதி விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று அறிவித்ததும்,இலங்கை அரசு அதற்கு சம்மதம் தெரிவித்தது. மேலும் பேச்சுவார்த்தை குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரையாழ்ப்பாணத்தில் சண்டை நிறுத்தம் கடைபிடிக்கப்படாது என்று இலங்கை அரசு அறிவித்திருந்தது. ஆனால் அதற்குபுலிகள் ஒத்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications