இந்தியாவைப் பார்த்து முன்னேறுங்கள் .. கிளின்டன்
லண்டன்:
வளரும் நாடுகளுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறது இந்தியா என்று அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் லண்டனில்வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கிளின்டன் தற்போது லண்டனில் உள்ளார். லண்டனில்உள்ள வார்விக் பல்கலைக்கழகத்தில் அவர் பேசியதாவது:
கடந்த மார்ச் மாதம் நான் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்தேன். அப்போது ராஜஸ்தான் மாநிலத்திற்குச்சென்றேன். அங்குள்ள நைலா என்ற இடத்தில் உள்ள கூட்டுறவு பால் சங்கத்தைப் பார்வையிட்டேன். அங்குபணிபுரியும் பெண்கள் அனைவரும் கம்ப்யூட்டர் உதவியுடன் வேலை செய்கிறார்கள்.
அந்தச் சங்கத்தில் கம்ப்யூட்டர், பிரின்டர்கள் போன்றவை இணைக்கப்பட்டிருந்தன. அங்கு வரும் பெண்கள்எவ்வளவு ஏழைகளாக இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. அவர்களுக்கும் கம்ப்யூட்டர்கள், அவற்றைஉபயோகிப்பது குறித்துத் தெளிவாக தெரிந்திருக்கிறது என்பதே முக்கியம்.
அங்கு வந்த ஒரு பெண், பிறந்து இரண்டு வாரங்களே ஆன தனது குழந்தைக்குத் தேவையான பொருட்களைவாங்கிக் கொண்டு சென்றார். மேலும் தன் குழந்தைக்கு அடுத்த ஆறு மாதத்திற்கு கொடுக்க வேண்டிய சிகிச்சை,உணவுகள் போன்றவை அடங்கிய விவரங்களை கம்ப்யூட்டரில் பிரதி எடுத்து வாங்கிக் கொண்டு சென்றார்.
குக்கிராமங்களில் வாழும் மக்களுக்குக் கூட இதுபோன்ற கம்ப்யூட்டர்களின் உபயோகங்கள் மற்றும் அவை குறித்தவிழிப்புணர்ச்சியை வழங்கிக் கொண்டிருக்கிறது இது போன்ற சங்கங்கள். பொருளாதார, சுகாதாரம், கல்விபோன்றவற்றில் கம்ப்யூட்டர் உபயோகிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் ஹைதராபாத் நகரம் தற்போது சைபராபாத் என்று பெயர் சூட்டும் அளவுக்கு கம்ப்யூட்டர் நகரமாகவேமாறி விட்டது. இதை மிகவும் நல்ல வளர்ச்சி என்றே கூறலாம். மேலும் அரசு மற்றும் அரசு சாரா அலுவலகங்களில்கம்ப்யூட்டர்கள் உதவியுடன் வேலைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இன்டர்நெட் உபயோகத்தில் அமெரிக்காவைவிட தெற்காசிய நாடுகள் 700 மடங்கு குறைவாகவே உள்ளது.வளர்ந்து வரும் நாடுகள் உலக வர்த்த கழகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றார் கிளின்டன்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications