நடத்தையில் சந்தேகம்: 60-ஐக் கொன்ற 36

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை அருகேயுள்ள மாங்காடு என்ற இடத்தில், நடத்தையில் சந்தேகப்பட்ட 60 வயதுக் கணவரை,மண்ணெண்ணை ஊற்றி தீவைத்துக் கொளுத்தினார் 35 வயது மனைவி.

வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நடந்தது. ரேஷ்மா பானு (35) என்பவர் இதுதொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரது கணவர் இஸ்மாயில் (60). இவர், ரேஷ்மா பானு நடத்தை குறித்துசந்தேகப்பட்டுள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

தற்போது ரம்ஜான் மாதமாதலால், துணி எடுக்கப் பணம் தருமாறு கணவரிடம் கேட்டுள்ளார் ரேஷ்மா பானு.அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரேஷ்மா பானு,மண்ணெண்ணை ஊற்றி தீவைத்துக் கொளுத்தி விடுவதாக மிரட்டினார். பின்னர் அதேபோல செய்து விட்டார்.உடனடியாக இஸ்மாயில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

முதலில் இதை விபத்தாகவே, போலீஸ் கருதியது. ஆனால் மருத்துவமனையில் இஸ்மாயில் மரண வாக்குமூலம்கொடுக்கையில்தான் நடந்த உண்மை தெரிய வந்தது.

இறந்த இஸ்மாயில், துணி வியாபாரம் செய்து வந்தவர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+