கூடங்குளம் அணு நிலையம்: ரஷ்யா ரூ. 13,800 கோடி கடனுதவி
நாகர்கோவில்:
தமிழகத்தில் அமைக்கப்படவிருக்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கெனஇந்தியாவுக்கு ரூ 13 ஆயிரத்து 800 கோடி நீண்ட கால கடன் வழங்க ரஷ்யா முன்வந்துள்ளது.
இது பற்றி அணுசக்தி கமிஷனின் கூடுதல் செயலாளர் பிரேம் குமார் தெரிவித்ததாவது:
திருநேல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைக்கும் பணிகள்நடைபெற்று வருகின்றன. இங்கு ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்திசெய்வதற்கான பணிகள் அடுத்த மாதம் துவங்கும்.
இதற்காக ரஷ்யா ரூ 13 ஆயிரத்து 800 கோடியை நீண்ட கால கடனாக வழங்க முன்வந்திருக்கிறது. 2020-ம் ஆண்டிற்குள் அணு மின் உற்பத்தி 20 ஆயிரம் மெகாவாட்டாகஉயர்த்தப்படும். முதலில் 3 ஆயிரம் மொகவாட் அணு மின்சாரம் உற்பத்தி செய்யப்படஉள்ளது.
இந்தியாவிற்கு 1 லட்சம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது என்றார் அவர்.
அணுமின் திட்ட இயக்குனர் ஜெயின் கூறுகையில், அணுமின் திட்ட அமைப்பு,பராமரிப்பு மற்றும் தரம் குறித்த அறிக்கைகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்சமர்ப்பிக்கப்படும்.
அணு மின் நிலையம் அமைப்பதில் முதல் கட்ட பணிக்காக ரூ. 100 கோடி தேவை.இதில் ரூ 25 கோடி தர அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இந்த பணி 6 ஆண்டுகளில்முடிவடையும்,
இந்த பணி முடிவடைந்தால் தென் மாநிலங்களுக்கு மின் விநியோகம் செய்ய முடியும்.தமிழகம் தவிர கேரளா, கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களும் இந்த திட்டத்தில்முதலீடு செய்ய முன் வந்துள்ளன.
200 மெகாவாட் அணுமின்சாரத்தை உற்பத்தி செய்யும் அணுஉலைகளைவெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் திறனை இந்தியா பெற்றுள்ளது என்றார் அவர்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications