மாநாடு நடத்துகிறது மக்கள் தமிழ் தேசியக் கட்சி
சென்னை:
மக்கள் தமிழ் தேசியக் கட்சியின் முதல் மாநில மாநாடு இந்த மாதம் 23-ம் தேதிசென்னையில், நடைபெறுகிறது.
இது பற்றி அக் கட்சித் தலைவர் கண்ணப்பன் வெள்ளிக்கிழமை சென்னையில்நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். பேட்டியின் விவரம்:
மக்கள் தமிழ் தேசம் கட்சியின் முதல் மாநில மாநாடு சென்னையில் இந்த மாதம் 23-ம் தேதிநடைபெறுகிறது.
மாநாட்டில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், முன்னாள் மத்திய அமைச்சர்காந்தி சிங் எம்.பி., மகாராஷ்டிராவின் இஸ்லாமியத் தலைவர் ஆசிம் உள்ளிட்ட பல்வேறுவட இந்தியத் தலைவர்களும், தமிழகத்தைச் சேர்ந்த பல சமுதாயத் தலைவர்களும் கலந்துகொள்கின்றனர்.
ஊர்வலம் சென்னை கத்திப்பாரா சந்திப்பு நேரு சாலையிலிருந்து புறப்பட்டுச் செல்லும்.ராதாகிருஷ்ணன் சாலை அருகே இருக்கும் பிரசிடென்சி ஓட்டல் அருகேஅமைக்கபடவுள்ள மேடையிலிருந்து தலைவர்கள் ஊர்வலத்தை பார்வையிடுவார்கள்.
இந்த மாநாடு போட்டிக்காக நடத்தப்படவில்லை. மக்கள் நலன் கருதியே நடத்தப்படுகிறது.ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன் கருதியே மாநாடுநடத்தப்படுகிறது.
மூன்றாவது அணி பற்றி இப்போது கருத்து எதுவும் கூற இயலாது. தேர்தல் அறிவிப்புவந்தவுடன் யாருடன் கூட்டணி என்பது குறித்து முடிவு செய்வோம்.
மக்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்கள் ஆட்சிக்கு வருவதில் தவறில்லை. மாநாடுமுடிந்தபின் தமிழகம் எங்கள் கட்சியின் பலம் குறித்து அறிந்து கொள்ளும் என கூறினார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications