பா.ம.க.வால் ஆட்சிக்கு ஆபத்தில்லை .. பாண்டி முதல்வர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பாட்டாளி மக்கள் கட்சியால் பாண்டிச்சேரி அரசுக்கு எந்த ஆபத்தும் கிடையாது என்றுஅம்மாநில முதல்வர் ப.சண்முகம் கூறியுள்ளார்.

சென்னையில், பாண்டிச்சேரி மாநில கைவினைப் பொருள் கண்காட்சியைத் துவக்கிவைத்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

அமைச்சர் தேனீ ஜெயக்குமாருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இருப்பதாககூறப்படும் புகார் குறித்து மத்திய அரசும், போலீஸும்தான் விசாரிக்க வேண்டும்.

இதுதொடர்பா மத்திய அரசு மற்றும் போலீஸ் விசாரணைக்கு பாண்டிச்சேரி அரசு முழுஒத்துழைப்பு கொடுக்கும்.

சட்டசபையில், ஜெயக்குமார் மீது புகார் கூற என்னிடம் சமர்ப்பிக்கப்பட்டஆவணங்களை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளேன். இனிமேல் கிடைக்கும்ஆவணங்களையும் அவ்வாறே அனுப்பி வைப்பேன்.

அமைச்சர கண்ணன் டிஸ்மிஸ் செய்யப்பட்டது ஜனநாயகப் படுகொலை என்று பா.ம.கநிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். அவ்வாறு கூற அவருக்கு உரிமை உள்ளது.

கண்ணன் நீக்கம் மற்றும் ராமதாஸ் கருத்து காரணமாக எனது ஆட்சிக்கு எந்த ஆபத்தும்இல்லை.

2001-ம் ஆண்டில் புதுவையில் ஆட்சியைக் கைப்பற்றுவோம் என்று ராமதாஸ் கூறிவருகிறார். ஆனால் மக்கள்தான் அடுத்த யார் வர வேண்டும் என்பதை முடிவு செய்வர்என்றார் சண்முகம்.

யு.என்.ஐ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+