காளிமுத்துவிடம் நலம் விசாரித்தார் ஜெ.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிமுக அவைத்தலைவர் காளிமுத்துவை அக்கட்சி பொதுச்செயலாளர்ஜெயலலிதா நேரில் சென்று சந்தித்து, அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.
கடந்த வாரம் அதிமுக அவைத்தலைவர் காளிமுத்துவுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இன்னும் தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து வருகிறார். இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாசனிக்கிழமை மாலை, காளிமுத்துவை நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தார்.
அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சங்கரய்யாவையும் அவர் சந்தித்துப் பேசி நலம்விசாரித்தார்.












Click it and Unblock the Notifications