சபரிமலை வருமானம் 19 கோடியைத் தாண்டியது
சபரிமலை:
மண்டல பூஜை விழா நெருங்குவதையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருமானம் ரூ 19 கோடியை தாண்டியுள்ளது.
கேரளாவில் புகழ்பெற்று விளங்கும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழாவையொட்டி கடந்த கார்த்திகை மாதம் 1 ம் தேதி நடைதிறக்கப்பட்டது. அன்று முதல் கேரளா, தமிழகம், கர்நாடகம், ஆந்திரா, பாண்டிச்சேரி மற்றும் பல மாநிலங்களிலிருந்து பக்தர்கள் விரதம் இருந்து இருமுடிகட்டி பஸ், கார், வேன்களில் வந்த வண்ணம் உள்ளனர்.
தினமும் காலை 4.30 மணி முதல் 12 மணி வரை நெய்அபிஷேகம், ஐயப்பசாமிக்கு நடத்தப்படுகிறது. இதனைக் காண பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.சபரிமலை முழுவதும் 24 மணி நேரமும் சரண கோஷம் ஒலித்துக் கொண்டே உள்ளது.
இந்த ஆண்டு கடந்த வெள்ளிக்கிழமை வரை வருமானம் ரூ 19 கோடியை தாண்டியது. கடந்த ஆண்டு இதே நாளில் கோவிலின் வருமானம் 17 கோடியே 77லட்சம்தான் கிடைத்தது.
அரவணை பாயாசம் விற்ற வகையில் ரூ 5 கோடியே 42 லட்சம் கிடைத்து உள்ளது. சென்ற ஆண்டு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அரவணை, அப்பம்வாங்கி சென்றனர். ஆனால் இந்த ஆண்டு அரவணை வாங்க அந்த அளவுக்கு கூட்டம் இல்லை.
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications