பாண்டி. அருகே ராமதாஸ் கார் மறிப்பு
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி அருகே, சூரமங்கலம் என்ற கிராமத்தில், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வந்தகாரை சிலர் தடுத்ததால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நெட்டப்பாக்கம் என்ற சட்டசபைத் தொகுதியில் கொடி ஏற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ராமதாஸ்,ஞாயிற்றுக்கிழமை அங்கு வந்தார். ராமதாஸ், நெட்டப்பாக்கம் உள்ளிட்ட சில கிராமங்களில் கொடியேற்றுவதற்குவிடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் ஆட்சேபம் தெரிவித்திருந்தது.
ராமதாஸ் வருகையை எதிர்த்து அப்பகுதிகளில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதியில்பரபரப்பான சூழ்நிலை நிலவியது. போலீஸார் இருதரப்பினரையும் அமைதிப்படுத்தினர். பின்னர் கருப்புக்கொடிகள் அகற்றப்பட்டன.
இதையடுத்து ராமதாஸ் சூரமங்கலம் என்ற இடத்திலிருந்து தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார். சிலகிராமங்களில் கொடி ஏற்றி விட்டு சூரமங்கலம் நோக்கி அவர் வந்து கொண்டிருந்தார். ஈரப்பாக்கம் என்றஇடத்திற்கு அவர் வந்தபோது, சிலர் அவரது காரை தடுத்து நிறுத்தினர். அங்கு போலீஸார் அதிக அளவில்குவிக்கப்பட்டிருந்தும் கூட இதை தவிர்க்க முடியவில்லை.
இதையடுத்து அங்கு பா.ம.கவினருக்கும், காரைத் தடுத்தவர்களுக்கும் இடையே மோதல் மூளும் சூழ்நிலைஏற்பட்டது. இதையடுத்து ஈரிப்பாக்கத்தில் கொடி ஏற்றாமலேயே ராமதாஸ் அங்கிருநது சென்றார்.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications