புஷ் தேர்வில் அமெரிக்கர்கள் திருப்தி
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபராக ஜார்ஜ் டபிள்யூ புஷ் ஜூனியர் தேர்வு செய்யப்பட்டதில்தவறில்லை என்று பெரும்பான்மை அமெரிக்க மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தல் மாபெரும் குழப்பங்களுக்குப் பிறகு ஒரு வழியாகமுடிவுக்கு வந்துள்ளது. ஜனவரி 20-ம் தேதி ஜார்ஜ் புஷ் ஜூனியர் அமெரிக்காவின்43-வது அதிபராக பதவியேற்கவுள்ளார்.
இந்நிலையில் வாஷிங்டனைச் சேர்ந்த ஏ.பி.சி. செய்தி நிறுவனம் நடத்தியகருத்துக்கணிப்பில், புஷ் தேர்வில் தவறில்லை என்று பெரும்பாலான அமெரிக்கர்கள்கருத்துத் தெரிவித்துள்ளனர். அதே சமயம், அமெரிக்க தேர்தல் முறையில் 3முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என 80 சதவிகித மக்கள் கருத்துதெரிவித்துள்ளனர்.
கருத்துக் கணிப்பின் முடிவு ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. கருத்து கணிப்புவிவரம்:
அதிகமான அமெரிக்க மக்கள் குடியரசு கட்சியைச் சேர்ந்த ஜார்ஜ் டபிள்யு புஷ் வெற்றிபெற்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.
கருத்துக் கணிப்பில் மூன்று முக்கிய யோசனைகளை அமெரிக்கர்கள்தெரிவித்துள்ளனர். கருத்து கேட்கப்பட்ட 807 பேரில் 88 சதவிகிதம் பேர் அமெரிக்காமுழுவதும் ஒரே மாதிரியான தேர்தல் முறை பின்பற்றப்பட வேண்டும் எனகூறியுள்ளனர்.
87 சதவிகிதம் பேர் ஒரே மாதிரியான வாக்களிக்கும் மெஷின்கள் பயன்படுத்தப்படவேண்டும் எனவும், 86 சதவிகிதம் பேர் ஒரே மாதிரியான வாக்கு எண்ணிக்கை முறைபின்பற்றப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
தேர்தலில் மயிரிழையில் தோல்வியுற்ற அல் கோருக்காக பலர்அனுதாபப்பட்டுள்ளனர்.
தொலைபேசி மூலம் 897 பேரிடம் கருத்து கேட்கப்பட்டதில் 50 சதவிகிதம் மக்கள்தேர்தல் முடிவு குறித்து திருப்தி தெரிவித்தனர். 45 சதவிகிதம் பேர் அதிருப்திதெரிவித்துள்ளனர்.
53 சதவிகிதம் பேர் புஷ் முழுமையான வெற்றி பெற்றதாக கூறியுள்ளனர். ஆனால் 40சதவிகிதம் பேர் இதை மறுக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications